இனி இவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் என்னும் கொரோனா பரிசோதனை செய்ய  தேவையில்லை!

0
77

இனி இவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் என்னும் கொரோனா பரிசோதனை செய்ய  தேவையில்லை!

கொரோனா தொற்றை கண்டறிய தற்போது நடைமுறையில் உள்ள சோதனை ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையாகும். இந்த சோதனையானது ஒரு நபருக்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு இருப்பின், அந்த அறிகுறிகள் கண்டறியப்பட்ட மூன்றாம் நாளில் இருந்து இந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பரிசோதனையில், தொற்று இல்லை என்று முடிவு வந்து, பிறகு அறிகுறிகள் அதிகமானால், அடுத்த இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என சொல்லப்படுகிறது. மேலும், இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களுக்கு அறிகுறிகள் இல்லை என்றாலும் ஒரு வாரம் தனிமைபடுத்திக்கொண்டு எட்டாம் நாளில் ஆர்.டி.பி.சி.ஆர் எனும் இந்த கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நிலையில், இந்தியாவில் இருந்து துபாய் வரும் பயணிகளுக்கு இந்திய விமான நிலையத்தில், எடுக்கப்படும் ஆர்.டி.பி.சி.ஆர் எனப்படும் கொரோனா பரிசோதனை தேவையில்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இந்தியாவில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் அனைவரும் தாங்கள் விமான பயணம் செய்யும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்துகொண்ட சான்றிதழை உடன் கொண்டு வர வேண்டும். இதனிடையே, இந்த பயணிகளுக்கு இந்திய விமான நிலையத்தில் 6 மணி நேரத்துக்கு முன்பாக செய்யப்படும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை தற்போது தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலாக பயணிகள் துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திறங்கியதும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதன்பின், இந்த பரிசோதனை முடிவுகளில் கொரோனா தொற்றின் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அவர்கள் துபாய் சுகாதார ஆணையத்தின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K