காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விக்கு இவர்கள்தான் காரணம்! விளக்கமளித்துள்ள கட்சியின் மூத்த தலைவர்!!

0
81

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விக்கு இவர்கள்தான் காரணம்! விளக்கமளித்துள்ள கட்சியின் மூத்த தலைவர்!!

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக தான் ஆட்சி செய்து வந்த பஞ்சாப் மாநிலத்தையும் பறிகொடுத்துள்ளது மட்டுமல்லாமல் அங்கும் படுதோல்வியை சந்தித்துள்ளது.

அதில், உத்தரபிரதேசத்தில் தனித்து களம் கண்ட காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களில் மட்டுமே வென்றது. இந்த ஐந்து மாநில தேர்தலின் எதிரொலியால் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் சிலர் கட்சி தலைமையே தேர்தல் தோல்விக்கு காரணம் எனவும், எனவே காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இதுகுறித்து கூறிகையில்,

நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விக்கு சோனியா காந்தி மற்றும் அவரின் குடும்பம் மட்டுமே பொறுப்பல்ல. கட்சியின் அந்தந்த மாநில தலைமை மற்றும் எம்.பி. ஆகியோரும்தான் பொறுப்பு எனக் கூறியுள்ளார்.

மேலும், சோனியா காந்தி மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். எனவே காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே தொடர்வார் என அவர் கூறியுள்ளார். இதில் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கட்சியை வலுப்படுத்துவதற்கான உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாகவும், எங்களின் சித்தாந்தத்தை முன்னிறுத்தி முன்பை விட அடுத்த தேர்தலில் சிறப்பாக செயல்படுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K