விக்ரம் திரைப்படம் ஹிட்டாவதற்கு காரணம் இவர்கள் மட்டுமே! மனம் திறந்து பேசிய கமல்!

0
120

விக்ரம் திரைப்படம் ஹிட்டாவதற்கு காரணம் இவர்கள் மட்டுமே! மனம் திறந்து பேசிய கமல்!

தற்போது உள்ள இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவருடைய இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் விக்ரம். மேலும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்து பிறகு ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டது.

மேலும் இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். கமலின் ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பையும் இந்த படம் பூர்த்தி செய்தது. மேலும் விக்ரம் திரைப்படம் வசூலில் ரூ. 420 கோடியை தாண்டியுள்ளது.

மேலும் 50 நாட்களை கடந்து திரையரங்கில் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றிக்கு என்ன காரணம் என்று கமல் ஹாசனிடம் அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்றில் கேள்வி கேட்டகப்பட்டது.

அதற்க்கு பதிலளித்த கமல் ஆடியன்ஸ் தான் இந்த வெற்றிக்கு காரணம் என கூறினார். அவர்களுக்கு தெரியும் எந்த படத்தை வெற்றிபெற செய்வேண்டும் என்று. பெரிய நட்சத்திரங்கள் நடித்த பல திரைப்படங்கள் படுதோல்வியடைந்துள்ளது. அதையும் அவர்கள் தாள் தான் செய்ய முடியும் எனவும் கூறினார். மேலும் கமல் மக்களை ஈர்க்கும் வகையில் தான் படம் இருக்க வேண்டும் என்று கூறினார். அந்த பேட்டி ரசிகர்களின் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

 

 

author avatar
Parthipan K