என் வழுக்கை தலைக்கு இந்த மூன்று விஷயங்கள் தான் காரணம் !! ரஜினியின் ஓபன் ஸ்லோ மோஷன்!

0
94

என் வழுக்கை தலைக்கு இந்த மூன்று விஷயங்கள் தான் காரணம் !! ரஜினியின் ஓபன் ஸ்லோ மோஷன்!

தமிழரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று பாராட்டப்படுபவர் தான் நம் தலைவர் ரஜினிகாந்த். இவர் உலக அளவில் மிகவும் பிரபலமாக வலம் வருபவர். இந்நிலையில் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று கலெக்ஷன்களை அள்ளி குவித்தும் தருகிறது.

தற்போது இவர் அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் ஹெட் லைன் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த திரைப்படத்தின் ரஜினியின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ரஜினியின் ரசிகர்கள்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தன் தலையில் முடி இல்லாமல் போனதற்கான காரணம் என்ன என்பது குறித்து வெளிப்படையாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.ரஜினிக்கு அழகே அவருடைய ஸ்டைலும் அந்த தலைமுடியும்தான். ஸ்டைலாக அந்த தலைமுடியை கோதியபடி அவர் நடந்து வரும் அழகே தனி கெத்து தான். அந்த ஸ்டைலுக்கு மயங்காத ரசிகர்கள் யாருமே இருக்க முடியாது. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டாருக்கு முடி கொட்டும் பிரச்சினை இருந்து வந்தது.

அந்தப் பிரச்சினை சிறிது சிறிதாக வளர்ந்து தற்போது அவர் தலையில் முடி கொட்டிவுடன் வழுக்கை தலையுடன் இருக்கிறார்.தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் எல்லாம் அவருக்கு பொருத்தமாக விக் அவருக்கு தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி பொது இடங்களிலும் அவர் வழுக்கை தலையுடன் தான் வருகிறார். திரைப்படம் நடிக்க மட்டும் தான் விக் யுஸ் பண்ணுவாரம் மத்த மடி எல்லா நேரத்திலும் சொட்டைதலைவுடன் தான் இருப்பாராம்.

ரஜினி அவர்கள் திரைப்படம் எடுக்கும் போது ஒவ்வொரு ஷாட்டுக்கும் தலை முடியை சீப்பை கொண்டு சீவுவாராம்.மேலும் அவர் முடியை கருப்பாக்குவதற்காக டை அடிக்க ஆரம்பித்திருக்கிறார். இதற்கு முழு காரணம் ரஜினிக்கு 20 வயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்தது.

பிறகு நரைமுடியும் அதிகமானதால் டை அடிப்பதையும் அவர் தொடர்ந்து செய்துவந்துள்ளர். மேலும் முக்கிய காரணமாக அவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் ஆரம்ப நிலையில் இருந்தே இருந்திருக்கிறது.

இதுதான் அவருடைய முடி கொட்டும் பிரச்சனைக்கு ஆரம்பமாக இருந்திருக்கிறது. நாளடைவில் அவருடைய முடி அனைத்தும் கொட்டி வழுக்கையாக இப்போது காட்சியளிக்கிறது. தன்னுடைய தலையில் முடி கொட்டியதற்கு காரணம் இதுநாளதான் என்று சூப்பர் ஸ்டார் தெரிவித்துள்ளார்.இதனால் இவர் ஒரு போதும் சங்கடப்பட்டதில்லை. அதற்காக வருத்தப்பட்டதும் இல்லை. இனி வரும் படங்களிலும் நடிக்க நான் தயாராக உள்ளேன் என்றார்.

author avatar
Parthipan K