இவர்கள் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும்! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

0
85

இவர்கள் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும்! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

இந்தியாவில் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. மேலும் அதன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸும் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அந்தந்த மாநிலங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் மத்திய அரசும் அவ்வப்போது கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் பரவல் குறித்தும் அதை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது.

அதில், லேசான அறிகுறி உள்ளவர்களை ஏழு நாட்கள் தனிமைபடுத்த வேண்டும் என்றும், அவ்வாறு தனிமைபடுத்தப்பட்ட நபருக்கு ஏழு நாட்களுக்கு பிறகு பாதிப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்த பின் டிஸ்சார்ஜ் செய்யலாம் என தெரிவித்துள்ளது. மேலும் லேசான அறிகுறி உள்ள நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காய்ச்சல் இல்லாமல் இருப்பதை உறுதி  செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து மிதமான அறிகுறி உள்ளவர்கள் ஆக்சிஜன் உதவி இல்லாமல் தொடர்ந்து மூன்று நாட்கள் வரை 93 சதவீதத்துக்கு மேல் ஆக்சிஜன் அளவை வைத்திருந்தால் அவர்களை டிஸ்சார்ஜ் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகையில்,

முதல் நாளில் ஒருவருக்கு செய்யக்கூடிய பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்றே முடிவு வரும் என்றும், வைரஸ் வளர நேரம் எடுக்கும் என்பதால் இது வைரஸ் மறைந்திருக்கும் காலம் என்று கூறியுள்ளது. எனவே வைரஸ் தாக்கிய மூன்றாம் நாளில் இருந்து 8-வது நாள் வரை செய்யப்படும் சோதனைகள் மூலம் கொரோனா வைரசை கண்டறிய முடியும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.

author avatar
Parthipan K