ஒரு நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய இந்த பொருட்களினால் உங்கள் மூட்டு வலி நிரந்தரமாக குணமாகும் அதிசயம் பற்றி அறிவீர்களா?

0
143
#image_title

ஒரு நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய இந்த பொருட்களினால் உங்கள் மூட்டு வலி நிரந்தரமாக குணமாகும் அதிசயம் பற்றி அறிவீர்களா?

ஒரு காலத்தில் வயதானவர்கள் தான் மூட்டு வலியால் அவதிப்படுவர். ஆனால் தற்போது இளம் வயதினரும் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர்.

மூட்டு சவ்வுகளில் ஏற்படும் பாதிப்புகளால் உண்டாகக்கூடிய வலி, மூட்டுகளுக்கு இடையே உள்ள திரவம் வறண்டு மூட்டுகள் உராய்வினால் ஏற்படும் வலி, என மூட்டு வலிகள் ஏற்படுகின்றன.

பொதுவாக மூட்டு வலிகள் அதிக உடல் எடை கொண்டவர்கள் மற்றும் கால்சியம் குறைபாடு உடையவர்களுக்கு ஏற்படும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மெனோபாஸ் காலகட்டத்தில் கால்சியம் குறைபாடு ஏற்படுவதினால் மூட்டு வலி ஏற்படும். உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் முரண்பாடு மற்றும் மரபு ரீதியாக மூட்டு வலிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

மூட்டு வலியை குணமாக்க கூடிய வீட்டு வைத்தியம் பற்றி பார்ப்போம்.

1. வெந்தய சூரணம்:
இது சீரகம், வெந்தயம், மிளகு ஆகியவற்றின் கலவையாகும். இது வயதான பின் ஏற்படும் மூட்டு வலி, கால்சியம் குறைபாட்டால் ஏற்படக்கூடிய மூட்டு வலியை தடுக்கும். இந்த மூன்று பொருட்களிலும் மூட்டுகளின் வலிமைக்கு தேவையான கால்சியம், மற்றும் மெக்னீசியம் அடங்கியுள்ளது.

வெந்தயம் 2 ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன், மிளகு 1/2 ஸ்பூன், இந்த அளவுக்கு எடுத்துக்கொண்டு அதை பொடியாக்கினால் வெந்தய சூரணம் தயார்.
இதை காலையில் ஒரு ஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கவும். அதேபோல் இரவு உணவிற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஒரு டம்ளரில் ஒரு ஸ்பூன் கலந்து குடிக்கவும். இதனால் மூட்டு வலி குறைவதோடு நிரந்தரமாக குணமாவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

2. சீரகத் தண்ணீர்:
பொதுவாகவே மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்களுக்கு செரிமான பிரச்சனை, பிரச்சனை இருப்பதை காணலாம். இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் எலும்புகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சத்துக்களை உடலானது உறிஞ்சிக் கொள்ளும். இதனால் எலும்புகளில் வீக்கம் மற்றும் தேய்மானம் ஏற்பட்டு மூட்டு வலி ஏற்படும்.
ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு கொதிக்க வைத்து இறக்கினால் சீரகத் தண்ணீர் தயார். இதனை ஒவ்வொரு முறையும் உணவு உட்கொண்ட பிறகு அரை மணி நேரம் கழித்து குடித்து வர செரிமான பிரச்சனை, வாயு பிரச்சனை நீங்கி மூட்டுகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து மூட்டு வலி குணமாகும்.