அரசு வேலைகளில் இவர்களுக்கு தான் முன் உரிமை! அரசாங்கம் வெளியிட்ட அதிரடி!

0
132
This is a working day for government employees! Sudden announcement!
This is a working day for government employees! Sudden announcement!

அரசு வேலைகளில் இவர்களுக்கு தான் முன் உரிமை! அரசாங்கம் வெளியிட்ட அதிரடி!

தமிழக அரசு 1970 ஆம் ஆண்டு வேலைவாய்ப்புகளில் யாருக்கெல்லாம் முதலில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அரசாணையை வெளியிட்டத்து.அந்த அரசாணையே 51 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது.அந்த அரசாணையில் தற்போது பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.குறிப்பாக கொரோனா என்ற பெரும் தொற்று மக்களை பெருமளவு பாதித்தது.அதிலிருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் பல உயிர்களை இழக்க நேரிட்டத்து.அதனால் அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகளை இன்றுவரை செய்து வருகிறது.

அந்த  கொரோனா தொற்றால் தாய் தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு பல நலத்திட்ட உதவிகளை அரசாங்கம் செய்து வருகிறது.அவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வழங்கி வருகிறது.தற்பொழுது ஒரு படி மேலாக அரசு வேலை வழங்குவதில் , கொரோனா தொற்றால் தாய் தந்தை இழந்த குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்குவதாக அந்த அரசாணையில் கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி கலப்பு திருமணம் செய்தவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என கூறியுள்ளனர்.இந்த அரசானையானது கடந்த 51 ஆண்டுகள் கழித்து தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல தனியார் அல்லது அரசு காப்பகங்களில் தாய் ,தந்தை இழந்து படிக்கும் வாரிசுதாரர்களுக்கு அவர்கள் படித்த சான்றிதழை பயன்படுத்தி அரசு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.அதுமட்டுமின்றி தாய் தந்தையை இழந்த கிராமப்புரங்களில் வசிக்கும் பிள்ளைகள் அந்த வட்டாட்சியர் மூலம் ஓர் அடையாள சான்றிதழை பெற்றுக்கொண்டு அதனைபயன்படுத்தி முன்னுரிமை பெற்றுக்கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

இவர்களுக்கு அடுத்ததாக முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அந்த அரசாணையில் தெரிவித்துள்ளனர்.அதுமட்டுமின்றி அரசு பள்ளியில் ,தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு 2 அல்லது 3 வது வரிசைப்பட்டியலில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.மேலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்த்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.51 ஆண்டுகள் கழித்து இவ்வாறான மாற்றங்களை பலர் வரவேற்கின்றனர்.