உலகின் பல பகுதிகளுக்கும் பரவிய புதிய வைரஸை நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது! – வருத்தம் தெரிவித்த தென் ஆப்பிரிக்கா!

0
90
There is nothing we can do about the new virus that has spread to many parts of the world! - Sorry South Africa!
There is nothing we can do about the new virus that has spread to many parts of the world! - Sorry South Africa!

உலகின் பல பகுதிகளுக்கும் பரவிய புதிய வைரஸை நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது! – வருத்தம் தெரிவித்த தென் ஆப்பிரிக்கா!

தற்போது புதிய கொரோனா வைரசான ஓமைக்ரான் வைரசை புதிதாக தற்போது தென்னாப்பிரிக்காவில் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸ் ஆனது 50 பிறழ்வுகளை கொண்டுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது குறித்து யாருக்கும் முழுமையாக எதுவும் தெரியவில்லை. மேலும் இந்த புதிய வகை வைரஸின் நன்மை, தீமைகளை பற்றி நமக்கு எதுவும் தெரியவில்லை.

ஆனால் தென் ஆப்ரிக்காவில் தான் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதனால் உலக நாடுகள் பலவும் கொரோனாவின் ஆரம்ப காலங்களில் இருந்ததை போல் மிகவும் அச்சத்தில் உள்ளது. அதன் காரணமாக அங்கு செல்ல பல நாடுகளும் விமான போக்குவரத்தை தடை செய்துள்ளன. ஆப்பிரிக்க நாடும் இதில் உள்ளடங்குமாறு சொல்லி உள்ளன.

மேலும் இது ஒரு வேகமாக பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா என்றும் பிறவகை கொரோனா வைரஸ் உடன் ஒப்பிடும்போது இந்த ஓமைக்ரான் கொரோனா வைரஸ் மிக வேகமாகவும், அதி தீவிரமாகவும் பரவும் ஆற்றல் கொண்டது என்றும், இதனை குறித்தும்,  இதன் பாதிப்புகள் குறித்தும் எந்த தகவல்களும் இதுவரை உறுதி செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஓமைக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்பது குறித்து இதுவரை யாருக்கும் தெரியவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தகவல் ஒன்றையும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தங்கள் நாடு மீது பிற நாடுகளும் பயண கட்டுப்பாடுகளை விதித்தது தென் ஆப்பிரிக்கா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு சுகாதாரத்துறை மந்திரி கூறுகையில் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுகளும், பயண கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் யாருமே எதிர்பார்க்காத ஒன்று என்றும், இதனால் பொருளாதாரம் அனைவருக்குமே பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் எங்கள் நாட்டின் மீது கட்டுப்பாடுகள் விதித்து உள்ள நாடுகள் அறிவியலை பின்பற்றும்போது அவர்களது முடிவுகளை மீண்டும் ஆய்வு செய்வார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனாலும் ஓமைக்ரான் வைரஸானது ஏற்கனவே உலகின் பல பகுதிகளுக்கும் பரவிவிட்டது என்றும், அவர் வேதனை தெரிவித்துள்ளார்.