நீட் தேர்வுக்கு எதிராக டிவிட்டரில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்!

0
76

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக இதுவரை 14 மாணவ மாணவிகள் உயிரிழந்திருக்கிறார்கள், ஆனாலும் இந்த நீட் தேர்வை ரத்து செய்வதில் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது.

இதற்கிடையில் இந்த நீட் தேர்விற்கு எதிர்க்கட்சியாக இருந்த சமயத்திலேயே மிகக் கடுமையான எதிர்ப்புக் குரலை எழுப்பிய திமுக, தற்சமயம் சட்டசபையில் நீட் தேர்விற்கு எதிராக சட்ட முன்வடிவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

அதோடு இந்த நீட் திட்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள், எத்துணை பேர் எதிர்ப்பு தெரிவித்தாலும் சரி தன்னுடைய முடிவில் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கின்றன வலைதள பதிவில், நீட் சமூக நீதிக்கு எதிரானது என்ற காரணத்தாலும், அதில் முறைகேடுகள் நடப்பதாகவும், அதில் இருந்து மகாராஷ்டிராவிற்கு விலக்கு பெற வேண்டும் என அந்த மாநில முதலமைச்சருக்கு ஆளும் கூட்டணியில் இருக்கின்ற காங்கிரஸ் மாநில தலைவர் கடிதம் எழுதியிருக்கிறார். நீட் ஒரு சமூக அநீதி என்பதற்கு இதுதான் சாட்சி என கூறியிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

இந்தியாவில் இந்தத் தேர்வை திணித்த காங்கிரஸ் கட்சியே அந்த தேர்வின் தீமைகளை உணரத் தொடங்கிவிட்டது, இது வரவேற்கத்தக்க விஷயம் ஆகும். இது ஒரு நல்ல திருப்பம் நாடு முழுவதும் இந்த தேர்விற்கு எதிரான அலை வீசத் தொடங்கி இருக்கிறது என்பதையே மகாராஷ்டிராவில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் கண்கூடாக காட்டுகிறது என்று தெரிவித்திருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

இந்தத் தேர்வு மிகப்பெரிய சமூக அநீதி இது ஒரு மாணவர் உயிர் கொல்லி என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது என்ற உண்மையை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழகம் போன்ற எந்தெந்த மாநிலங்கள் நீட் விலக்கு கேட்கிறதோ அந்தந்த மாநிலங்களுக்கு அதற்கான ஒப்புதலை வழங்கிவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து பதிவிட்டு இருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.