சொந்த தாய் நாட்டிலேயே அந்த பாகுபாடுகள் நிறைய உள்ளது! வேதனை தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

0
72
There is a lot of that discrimination in the native country! Former cricketer who expressed pain!
There is a lot of that discrimination in the native country! Former cricketer who expressed pain!

சொந்த தாய் நாட்டிலேயே அந்த பாகுபாடுகள் நிறைய உள்ளது! வேதனை தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

நம் நாட்டில் காலம் காலமாகவே ஒரு பழமொழி உள்ளது. வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று பொதுவாக குறிப்பிடுவது போலவே அந்த பழமொழி அமைந்திருக்கும். அதாவது வெள்ளையாக இருப்பவர்கள் என்ன சொன்னாலும் நம்பலாம். கருப்பாக இருப்பவர்கள் சொன்னால் போய் என்பதுபோல் சித்தரிக்கப்பட்ட ஒன்றுதான் இது.

அதேபோல் நிறவெறி என்பது இன்னமும் நம் சமூகத்தில் பல இடங்களிலும் நிறைந்து இருக்கிறது. வெள்ளை நிறமே அழகு என்பது போன்ற மாயை காலம் காலமாக பலரும் கட்டமைத்து உள்ளனர். அதற்கு எதிராக பலர் போராடி உள்ளனர். அதில் மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களும் முக்கியமானவர்களாக கருதப்படுகின்றனர். இன்றும் கருப்பினத்தவர்கள் மீது பலவிதமான கொடுமைகள் அவர்களுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

அதை பலரும் தற்போது எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர். அது செயல் பூர்வமாகவும் இருந்து வருகின்றது. அமெரிக்காவில் ஜார்ஜ் ப்ளாட் கொல்லப்பட்டதை அடுத்து இனவெறிக்கு எதிராக பகிரங்கமாக குரல் எழுப்பும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அதிலும் வளர்ந்து வரும் விளையாட்டு பிரமுகர்களுடன் இணைந்து செயல்படும் முதல் வீரர்களில் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்கள் டேரன் சமி மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோரும் அதில் அடங்கியுள்ளனர்.

சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் கூட அனைத்து அணிகளின் வீரர்களும் இக்கொடுமைக்கு எதிராக முழங்காலிட்டு உறுதிமொழி மேற்கொண்டுதான் விளையாட துவங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில மாதங்களாகவே நிறவெறி என்பது மிகவும் பெரிய விஷயமாக மாறி கண்டிக்கத் தக்கதாக மாறிக் கொண்டு வருகின்றது.

இங்கிலாந்தில் யார்க் ஷயர் கிரிக்கெட் அசிம் ரபிக் என்பவர் புயலைக் கிளப்பினார். இதில் மைக்கேல் வாகன் உட்பட பல இங்கிலாந்து வீரர்களின் உண்மை முகங்களும், நடத்தைகளும் வெட்ட வெளிச்சமாக தெரிய வந்தது. ஆனால் தற்போது சொந்த நாட்டிலேயே நிறவெறி பாகுபாடு உள்ளது என்றும், இங்கேயே நான் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானேன் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் லெக் ஸ்பின்னர் எல்.சிவராம கிருஷ்ணன் மனம் திறந்து அவரது இத்தனை கால வேதனைகளையும் கொட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். நான்  வாழ்நாள் முழுவதும் விமர்சிக்க பட்டவனாக இருந்தேன். மேலும் நிறப் பாகுபாடு காட்டப்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமாகவும் இருந்தது. இது நம் நாட்டிலும் நடக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும் இது குறித்து பேசிய முதல் கிரிக்கெட் வீரர் இவர் மட்டுமல்ல.

இதற்கு முன்பே கடந்த 2017 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய தொடக்க வீரர் அபினவ் முகுந்த் கூட கடந்த காலங்களில் இந்த பிரச்சினை குறித்து பேசியுள்ளார். இந்திய அணிக்காக தொடக்க வீரராக அவர் இந்தியாவுக்கு வெளியேயும், உள்ளேயும் விளையாடி உள்ளார். அவர் என்னுடைய 15 வயதில் இருந்தே அதிகமாக பயணங்களை மேற்கொண்டு உள்ளேன்.

மேலும் அவர் சிறு வயதிலிருந்தே என் மீது மக்கள் வைத்திருக்கும் ஒரு விதமான எண்ணம் எனக்கு இன்னமும் புதிராகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார். வெயில் காலத்திலும், வெயில் இல்லாத நேரத்திலும் கூட நான் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு உள்ளேன். நம் நாட்டிற்காக விளையாடியும் உள்ளேன். ஆனால் ஒருமுறை கூட நான் வெயிலில் நின்று விளையாடியும், அதனால்தான் என் தோலின் நிறம் குறைந்து விட்டது என்றும் நான் வருத்தப்பட்டதில்லை என்று கூறி உள்ளார்.

நான் என்ன செய்கிறேனோ அதை விரும்பி செய்கிறேன். நாட்டிலேயே அதிகமாக வெப்பம் நிறைந்த பகுதியான சென்னையில் இருந்து வந்துள்ளேன். என்னுடைய இளமைக் கால வாழ்க்கையின் பெரும் பகுதிகளை கிரிக்கெட் மைதானத்திலேயே செலவழிந்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார். அதே போல் தென் ஆப்பிரிக்க அணியில் பல கறுப்பின வீரர்கள் விளையாடியுள்ளனர்.

அதில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மகாயா நிடினி, ஸ்பின்னர் பால் ஆடம்ஸ், விக்கெட் கீப்பர் சோலகிளி, ஆஷ்வெல் பிரின்ஸ், பிலாண்டர் உள்ளிட்ட வீரர்கள் அணிக்குள்ளேயே வேறு விதமாக நடத்தப்பட்ட கதையும் தற்போது தான் வெளிவந்துள்ளது. அவர்கள் ஒன்றாகவே விளையாடுவார்கள். ஒன்றாகவே எல்லாம் செய்வார்கள். ஆனால் பயணம் மேற்கொள்ளும் பேருந்துகளில் ஒன்றாக அமர மாட்டார்கள்.

அதேபோல் உணவருந்தும் சமயங்களிலும் ஒன்றாக அமர மாட்டார்கள் என்று கூறியது அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/LaxmanSivarama1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1464066933238554635%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FSports%2FCricket%2F2021%2F11%2F30153016%2FSivaramakrishnan-I-have-been-colour-discriminated.vpf