தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி நல்லதா? கெட்டதா ஒரு அலசல்!

0
64

தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்கவேண்டும் ஆனால் 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன என்று சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது அவற்றில் நகர்ப்புற பகுதிகளில் 14 சுங்க சாவடிகளில் புறநகர்ப் பகுதிகளில் 9 சுங்கச்சாவடிகளும் இருக்கின்றன. சென்னை நகரப் பகுதிக்குள் இருக்கின்ற சென்னை சமுத்திரம் நிமிண்டி, வானகரம். பரனூர் மற்றும் சூரப்பட்டு உள்ளிட்ட ஐந்து சுங்கச்சாவடிகளை கடப்பதற்கு நீண்ட நேரம் பிடிக்கிறது அதனை அகற்றுவதற்கு முதலமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார் என கூறியிருக்கிறார் அமைச்சர்.

இது குறித்து மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருக்கிறார். சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து இது தொடர்பாக உரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம் என கூறியிருக்கிறார் அமைச்சர் எ.வ. வேலு.

மாநிலத்தில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் அந்தந்த பகுதிகளில் சுங்க சாவடிகள் அமைத்து அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் பரிசோதனை செய்வது மற்றும் போக்குவரத்து அதற்கான கட்டணத்தை வசூலிப்பது போன்ற பணிகளில் இந்த சுங்க சாவடி ஊழியர்கள் ஈடுபடுவார்கள். அப்படி வசூலிக்கப்படும் பணம் அந்த சாலை பராமரிப்பு மற்றும் பூஞ்செடிகள் வைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு செலவிடப்படும் என்று தெரிவிக்கிறார்கள்.

ஆனாலும் இப்படி சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் மொத்த தொகையும் அந்த சாலைக்கு செலவிடப்படுவதில்லை. அந்த சாலை பராமரிப்பு பணிகளுக்கு செயல்படுத்தப்படும் தொகையை தவிர்த்து மற்ற தொகை அப்படியே மத்திய அரசின் கருவூலங்களுக்கு சென்றுவிடும். இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்

அதேநேரம் இப்படி சுங்கச்சாவடிகள் ஆங்காங்கே இருப்பதால் நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகளும் மற்றும் கடத்தல் உள்ளிட்ட கிரிமினல் தொழில்களும் நிறுத்தப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள்