தங்கமகன் நீரஜ் சோப்ரா! வெள்ளிப் பதக்கம் வென்று புதிய சாதனை!

0
54

ஈட்டி எறிதலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா அதன்பின்னர் பங்கேற்று கொண்ட முதல் சர்வ தேச போட்டியில் நேற்று பின்லாந்து துர்க்குவில் ஜாம்பவான்கள் உடன் விளையாடிய பாவோ நூர்மி போட்டியில் நீரஜ் சோப்ரா 89.30 மீ தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனையை படைத்ததுடன் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார்.

இதற்கு முன்பாக பாட்டியாலாவில் 88.07 மீட்டர் தூரம் விட்டெரிந்தது இவரின் தேசிய சாதனையாக இருந்தது. ஆனால் இதனை விடவும் குறைவாக 87.58 மீட்டர் விட்டெறிந்து ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற இந்த ஜாவ்லின் போட்டியில் பின்லாந்தை சேர்ந்த ஆலிவர் ஹெலாண்டர் 89.83 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார்.

நேற்று முதலில் 86.92 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து பிரமாதமாக ஆரம்பித்த நீரஜ் சோப்ரா இவருடைய அடுத்த 3 முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது. 6வது மற்றும் கடைசி எறிதலில் 85.85 மீட்டர் தூரம் எறிந்தார். ஆனாலும் இவர் எரிந்த 89.30 மீட்டர் தூரம் வெள்ளிப் பதக்கத்துக்குறியதானது.

பின்லாந்து வீரரின் சொந்த சாதனை நீரஜ் சோப்ராவை விடக் குறைவுதான் என்று சொல்லப்படுகிறது. அதாவது, எந்தத் 8.02 மீட்டர் தான் அவருடைய சாதனையாக இருந்தது. ஆனால் நேற்று 89.83 மீட்டர் ஈட்டி எறிந்து எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி தங்கம் வென்றார் என சொல்லப்படுகிறது.

உலகச் சாம்பியன் கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.60 மீட்டர் தூரமே விட்டெறிந்து ஏமாற்றமளித்தார். இவருடைய சொந்த சாதனை 93.07 மீட்டர் ஆனாலும் அவர் நேற்றைய தினம் 87 ஐ கூட நெருங்கவில்லை. ஆகவே 3வதாக முடிந்தார் என சொல்லப்படுகிறது.

2012-ம் வருடம் ஒலிம்பிக் சாம்பியன் டிரினிடாடை சார்ந்த கேஷோன் வால்காட் என் 84.02 மீட்டர் தூரம் எறிந்து 5-வது இடமும் பிடித்திருக்கிறார்கள்.

அதற்கு கடுமையான போட்டி சோப்ராவிற்கு கடுமையான போட்டி வழங்குபவர் நேற்று விளையாடவில்லை. டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜேகப் வால்டோயிச் 83.91 மீட்டர் தூரமே எறிந்து 6வது இடம் பிடித்தார்.

சோப்ரா எதிர்வரும் சனிக்கிழமை பின்லாந்தில் கூர்ட்டானே விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று கொள்கிறார் என சொல்லப்படுகிறது.