Breaking வாட்ஸ் அப்பில் தீயாய் பரவிய செய்தி! ஆசிரியை உட்பட 3 பேர் திடீர் கைது!

0
125
whatsapp
whatsapp

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராட வேண்டியுள்ளதால் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் தபால் ஓட்டு செலுத்தும் பணி கடந்த 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 89 ஆயிரத்து 185 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் உள்ள பள்ளி ஆசிரியை ஒருவர் தன்னுடைய தபால் வாக்கினைபுகைப்படம் எடுத்து ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என வைத்தது சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தென்காசி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பழனி நாடார் புகார் அளித்தார்.

ஆசிரியை இப்படி சோசியல் மீடியாவில் தன்னுடைய வாக்குப்பதிவை பகிர்ந்து கொள்வது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால், அந்த ஆசிரியை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டு சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளருக்கு வட்டாரக் கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் வாக்குச்சீட்டின் புகைப்படத்தை வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வெள்ளகால் பள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணவேனி என்ற ஆசிரியை உடையது என்பது கண்டறியப்பட்டது. வாக்குசீட்டை தன் மகனுக்கு அனுப்புவதற்காக எடுத்த போட்டோவை தன் கணவர் வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆசிரியை கிருஷ்ணவேணி, அவரது கணவர் கணேச பாண்டியன், நண்பர் செந்தில் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வர உள்ள சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பணியாற்ற உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது தபால் வாக்குகளை போட்டோ எடுத்து வாட்ஸ்அப் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் எதையும் வைக்காதீர்கள் எந்த ஒரு முகநூல் பக்கத்திலும் பதிவிட வேண்டாம் என எச்சரிக்கைப்பட்டுள்ளனர்.

author avatar
CineDesk