பல நாட்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டது – மகிழ்ச்சியில் மக்கள்!

0
64

கொரோனா தொற்று நோய்  பரவல் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது அதற்கு பின்பு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன தற்போது ஐந்தாம் கட்ட தளர்வுகளாக மத்திய அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் இந்த அனுமதியுடன் சேர்த்து சில விதிமுறைகளை பின்பற்ற சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது. அது என்ன விதிமுறைகள் என்றால் திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியில் கடைபிடித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிதல்,  பார்வையாளர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பிறகே உள்ளே அனுமதிக்கப் படுவார்கள்.

மேலும் திரையரங்குகளின் உள்ளே இடைவெளிவிட்டு அமர்த்தப்படுவர். பார்வையாளர்கள் அமர கூடாத இருக்கைகளில் குறியீடு இடப்பட்டு இருக்க வேண்டும். திரையரங்கில் ஒரு காட்சி முடிந்த பின் மறு காட்சி துவங்கும் முன் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்.

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளாக இருப்பின் ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சி தூங்குவதற்கும் மக்கள் கூட்டம் கூடாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது. இவ்வாறு பல வழிமுறைகளை பின்பற்றி ஹரியானா, உத்திரப்பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் திரையரங்குகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. பல மாதங்களுக்குப் பின்பு திரையரங்கிற்கு வரும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K