திரையரங்குகள் திறக்கப்படும்! மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

0
53

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்களிலும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்பு நடத்தவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு பின்பே படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இடைப்பட்ட காலங்களில் திரைப்படங்கள்  OTTயில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே திரையரங்குகள் இயங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது : திரையரங்குகளில் ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி துவங்குவதற்கு முன் கிருமி நாசினி தெளித்தல், திரையரங்குக்கு வருபவர்களை இடைவெளி விட்டு அமர்த்துதல், உடல் வெப்பநிலை அறிதல், முக கவசம் அணிதல், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வைத்தல் போன்ற பல விதிகளை பின்பற்ற சொல்லி அறிவித்துள்ளார்.

திரையரங்கிற்கு வருபவர்களை ஆரோக்கிய சேது செயலியை  பயன்படுத்துமாறு வலியுறுத்துதல், திரைப்படம் தொடங்கும்முன்னும், இடைவெளியின் போதும், முடியும் போதும் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை திரையிட வேண்டும். திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதித்தல் வேண்டும். எச்சில் துப்புவது அனுமதிக்கக்கூடாது, தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் வேண்டும், அமர வேண்டிய இருக்கைகள் இடைவெளிவிட்டு இருத்தல் வேண்டும், அமராத இருக்கைகளில் குறியீடுகள் இடப்பட்டு இருக்க வேண்டும் போன்ற விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் வாங்கும் இடங்களில் இடைவெளிவிட்டு குறியீடு இடப்பட்டிருக்க வேண்டும்,  போதுமான அளவு பாக்ஸ் ஆபீஸ் கவுண்டர்கள் இருக்க வேண்டும், ரெடி கேஸ்க்கு பதிலாக ஆன்லைன் பண பரிவர்த்தனை மற்றும் முன்பதிவு வசதிகளை ஊக்குவிக்க வேண்டும், மேலும் மூடப்பட்ட பொருட்களை மட்டும் கேன்டீனில் விற்பனை செய்ய வேண்டும்,  ஏசி 24 டிகிரி முதல் 30 டிகிரி சி எனும் நிலையிலே போடப்பட்டிருக்க வேண்டும். இதுபோன்ற புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது மத்திய அரசு.

author avatar
Parthipan K