ஊரடங்கிற்கு பின் திரையரங்கு டிக்கெட் விலை குறைகிறதா?

0
79

கொரானா நோய்த்தொற்றுக் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் மே மாத இறுதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது‌. இந்த ஊரடங்கினால் பெரும் பின்னடைவை சந்தித்தது தமிழ் திரைப்படத்துறை. பிரபல நடிகர்களின் படங்களையும் வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்களும் விநியோகிஸ்தர்களும் தவித்தனர்.

இந்நிலையில் OTT தளத்தில் பிரபல நடிகையின் படம் ஒன்று வெளியாக உள்ளது. மற்ற திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இந்நிலை ஏற்படுமோ என்று பலரால் பேசப்படுகிறது. மேலும் ஊரடங்கு முடிந்தாலும் திரையரங்குகள் இயல்புக்கு நிலைக்கு திரும்புமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்று திரையரங்கம்.

இதனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் ஒன்றிணைந்து தங்கள் பொருளாதார பின்னடைவை தடுக்க சில முடிவுகள் எடுத்ததாக கூறப்படுகிறது. அதில் முக்கியமாக தியேட்டர் டிக்கெட் விலை குறைக்கப்படும் என்று தமிழ் திரைத்துறை வட்டாரங்களால் கூறப்படுகிறது.

மக்கள் இருக்கும் பொருளாதார நிலையின் அடிப்படையிலும், திரை அரங்குகள் இயல்பு நிலைக்கு திரும்பவும் இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் மக்கள் அனைவராலும் வரவேற்கப்படும் என பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K