Breaking News
சிறுமைக்கு ஆசை வார்த்தை கூறி வாலிபர் செய்த வெறி செயல்! ஈரோடு மாவட்டத்தில் நடந்த அநியாயம்!

சிறுமைக்கு ஆசை வார்த்தை கூறி வாலிபர் செய்த வெறி செயல்! ஈரோடு மாவட்டத்தில் நடந்த அநியாயம்!
ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி அருகே உள்ள நீலிபாளையம் பகுதியில் தம்பதி ஒருவர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 17 வயது மகள் உள்ளார். அவர் தற்போது சமீபத்தில் மாயமாகியுள்ளார். மேலும் அதனை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து புன்செய்புளியம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது போலீசார் முதற்கட்ட விசாரணையில் கடம்பூர் மலைப்பகுதியைச் சேர்ந்த சித்தேஷ் (22) என்பவர் சிறுமியை கடத்திச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்றதும் தெரிய வந்தது.
மேலும் சிறுமியை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் இதனையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சித்தேஷ் என்ற வாலிபரை கைது செய்து சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். மேலும் அவருக்கு சிறை தண்டனை விதித்து சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பெற்றோர் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.