தனது லீலைகளை பேஸ்புக்கில் காட்டிய இளைஞர்! இறுதியில் போலி ஆசாமிக்கு ஏற்பட்ட கதி !

0
128
The young man who showed his lilas on Facebook! Leela Asami caught red handed in cybercrime!
The young man who showed his lilas on Facebook! Leela Asami caught red handed in cybercrime!

தனது லீலைகளை பேஸ்புக்கில் காட்டிய இளைஞர்! இறுதியில் போலி ஆசாமிக்கு ஏற்பட்ட கதி !

சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தற்போது அதிக அளவு பிரபலமாக உள்ளது. ஃபேஸ்புக் வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் என ஏராளமான செயலிகள் நாளுக்கு நாள் புதுமையாக வெளிவந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் தனது கருத்துக்களை வெளிப்படையாக சொல்லும் வண்ணம் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் போன்றவை செயல்பட்டு வருகிறது. இவை உபயோகிப்பதில் பல நன்மைகளும் உள்ளது. அதற்கேற்றவாறு மறுபக்கம் பல தீமைகள் நடந்து வருகிறது.

குறிப்பாக இந்த பேஸ்புக்கில் பல சிறுமிகள் சிக்கிக் கொண்டு தனது வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர். சில நபர்கள் போலி ஃபேஸ் புக் ஐடி உபயோகித்து சிறுமிகள் மற்றும் பெண்களை குறிவைத்து, ஆசை வார்த்தைகள் கூறி பேசுகின்றனர். பெண்களும் அதை நம்பி தங்களது புகைப்படத்தை அனுப்புவது என ஆரம்பித்து பல இன்னல்களில் சிக்கிக் கொள்கின்றனர்.கன்னியாகுமரியை சேர்ந்த சுரேஷ் என்பவர் பல போலி ஃபேஸ்புக் ஐடி  தொடங்கி தனது லீலைகளை ஆரம்பித்துள்ளார்.

இவ்வாறு ஆரம்பிக்கும் போலி ஃபேஸ்புக் கணக்கில், சுரேஷ் தொடர்ந்து பெண்களைப் பற்றி அவதூறாக  பேசியும் புகைப்படங்களை அப்லோட் செய்து வந்துள்ளார்.இதுகுறித்து சிலர்   சைபர் கிரைமிடம் புகார்அளித்துள்ளனர். போலீசார் அந்த புகாரை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.அந்த விசாரணையில்  தான் இந்த ஆசாமி  கன்னியாகுமரி சேர்ந்தார் சுரேஷ் என்பவர் இன்று தெரிய வந்தது.

இவர் கன்னியாகுமரியில் நித்திவிரளை என்னும் ஊரில் வசித்து வருவதும் கண்டறியப்பட்டது. மேலும் சைபர் கிரைம் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் சுரேஷை கைது செய்துள்ளனர்.இமாறியான ஆண்களிடம் தான் பெண்கள் சிக்கிக்கொண்டு பல இன்னல்களுக்குள் சிக்கிக் கொள்கின்றனர்.பெருமளவு பெண்கள் விழிப்புணர்வுடன் காணப்பட வேண்டும்.