இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி! அணியை அறிவித்த மேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகம்!!

0
51

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி! அணியை அறிவித்த மேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகம்!!

 

இந்தியா மற்றும் மேற்க்கிந்திய தீவுகள் அணி மோதும் முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியை மேற்க்கிந்திய தீவுகள் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

மேற்க்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒடிஐ தொடரிலும் 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.

 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12ம் தேதி டோம்னிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சென்ற இந்திய அணி கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறது.

 

இந்த வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரில் பங்கேற்கும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையிலும் டி20 தொடருக்கான இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையிலும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்திய டெஸ்ட் அணியில் கடந்த உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நன்றாக விளையாடத் தவறிய புஜாராக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். புஜாராவுக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடிய ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ஜெய்ஸிவால் இருவரும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் இந்திய அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி கிரெய்க் பிராத்வெயிட் தலைமையில் களமிறங்குகிறது. மேலும் ஜெர்மைன் பிளாக்வுட் துணை கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக எடை பருமன் கொண்ட ரஹீம் கார்ன்வால், ஜேசன் ஹோல்டர், அல்சாரி ஜோசப் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

 

முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி…

 

கிரெய்க் பிராத் வெயிட்(கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட்(துணைக் கேப்டன்), ஜேசன் ஹோல்டர், அல்சாரி ஜோசப், ரஹீம் கார்ன்வால், கெமோர் ரோச், அலிக் அதானாஸ், டேகனரைன் சந்தர்பால், ஷானன் கேப்ரியல்,  ஜேஸ்சுவா டா சில்வா, கிர்க் மெக்கன்சி, ஜோமோல் வாரிக்கன், ரேமன் ரெய்ஃபர் மாற்று வீரர்களாக டெவின் இம்லாச், அகீம் ஜோர்டான் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.