தளபதிக்கு வந்த ஆப்பு!! லேப்ட் ரைட் வாங்கிய நீதிபதி!!

0
73
The wedge that came to the commander !! Left Right Sentence Judge !!
The wedge that came to the commander !! Left Right Sentence Judge !!

தளபதிக்கு வந்த ஆப்பு!! லேப்ட் ரைட் வாங்கிய நீதிபதி!!

தமிழ் திரைப்படங்களில் வரும் நடிகர்களை பார்த்து தான் இளம் தலைமுறைகள் நிறைய கற்றுக் கொள்கின்றனர். இந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் விஜய். இவரை தளபதி என்று அவரின் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். மேலும் தளபதி விஜய் அவர்கள் தமிழில் 64 படங்களில் நடித்துள்ளார். இவரின் எளிமையான நடிப்பிற்கும் இவரின் சிரிப்பிர்க்கும் பல கோடி ரசிகர்கள் அடிமை. மேலும் அண்மையில் கடந்த வருடம் தீபாவளி  அன்று விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் மாஸ்டர் படம் வெளியானது. அந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது தளபதி 65 படம் உருவாகி வருவதாக தகவல் வந்துள்ளது.

இந்த நிலையில் தளபதி விஜய் அவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றினை இறக்குமதி செய்திருந்தார். மேலும் நடிகர் விஜய் தான் இறக்குமதி செய்திருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கும் நுழைவு வரி விதிக்க தடை செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தாக்கல் இன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. மேலும் மனுவை விசாரித்த நீதிபதி சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது.

நடிகர்கள் தான் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் உண்மையான ஹீரோவாக இருங்கள். ரீல் ஹீரோவாக இருக்க வேண்டாம். வரி என்பது நன்கொடை கிடையாது. கட்டாய பங்களிப்பு என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து நீதிபதி நடிகர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்து அவரது மனுவினை தள்ளுபடி செய்துள்ளார். மேலும் நடிகர் விஜய்க்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதித்து 2 வாரத்தில் அபராத தொகையை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் என்று கால அவகாசம் கொடுத்து உள்ளார்.

author avatar
Preethi