திடீரென நடுவழியில் நின்ற ரயில்! உணவு இன்றி பயணிகள் தவிப்பு!

0
68
The train suddenly stopped in the middle! Travelers suffering without food!
The train suddenly stopped in the middle! Travelers suffering without food!

 திடீரென நடுவழியில் நின்ற ரயில்! உணவு இன்றி பயணிகள் தவிப்பு!

தற்போது தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ரயிலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் ,கைக்குழந்தைகள் ,சர்க்கரை நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பயணிக்கும் விதமாக அமைந்துள்ளது.

அதனால் ரயிலில் பயணம் செய்பவர்கள் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உணவுகளை வாங்கி கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.அந்த உணவுகளில் உள்ளூர் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் அனைத்தும் அடங்கும்.

மேலும் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகின்றது.அதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ,நிலச்சரிவு போன்றவைகள் ஏற்பட்டுள்ளது.வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தான் கனமழை  பெய்து வருகின்றது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே இரவு நேரத்தில் பரவலாக கனமழை பெய்து வருகின்றது.அதனால் குன்னூர் -மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் அடர்லி இடையே பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது.அதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 7.10 மணிக்கு புறப்பட்ட மலை ரயில் அடர்லி அருகே நிறுத்தப்பட்டது.

மேலும் இது குறித்து ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் விரைந்து வந்து மண் சரிவை அகற்றி சீரமைத்தனர்.அதனையடுத்து ஒரு மணி நேரம் தாமதாமாக மலை ரயில் குன்னூர் வந்தடைந்தது.இந்த ரயில் தாமதத்தினால் சுற்றுலா பயணிகள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி சிரமம் அடைந்தனர்.

author avatar
Parthipan K