நடுக்கடலில் கவிழ்ந்த படகு அகதிகளாக வந்த மக்களுக்கு நேர்ந்த சோகம்!

0
101

நடுக்கடலில் கவிழ்ந்த படகு  அகதிகளாக வந்த மக்களுக்கு நேர்ந்த கொடூரம்! 

அகதிகளாக வந்த மக்களின் படகு கவிழ்ந்ததில் நான்கு பேர் பலியாகினர். கிரீஸின் அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஆப்கானிஸ்தான், ஆப்ரிக்கா, ஈராக், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக குடியேறி வருகின்றனர். இதற்காக இவர்கள் சட்ட விரோதமாக ஆபத்தான கடல் வழி பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இந்த பயணத்தின் போது படகுகள் கவிழ்ந்து ஏற்படும் உயிரிழப்புகளும் ஏராளம். இந்நிலையில் துருக்கி நாட்டில் இருந்து 40 க்கு மேற்பட்ட அகதி மக்கள் ஒரு படகில் மத்திய தரைக் கடல் பகுதி வழியாக கிரீஸ் நாட்டிற்கு நுழைவதற்கு  சட்டவிரோதமான பயணம் மேற்கொண்டனர்.

இந்த படகானது கிரீஸ் நாட்டின் லிரோஸ் தீவுக்கூட்டம் அருகே வரும் பொழுது கடலில் உள்ள கடற்பாறைகள் மீது மோதி விபத்துக்குள்ளானது இதனால் படகு கவிழ்ந்து படகில் உள்ள அனைவரும் நீரில் மூழ்கினர். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட கடலோர காவல் படையினர் விரைந்து சென்று சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

ஆனாலும் இந்த விபத்தில் பெண் உட்பட நான்கு பேர் கடலில் மூழ்கி பலியாகினார்கள்.  37 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

துருக்கி நாடானது அகதிகளை தங்கள் நாட்டிற்கு சட்டவிரோதமாக கடல் வழியாக அனுப்பி வைப்பதாக கிரீஸ் நாடு ஏற்கனவே பலமுறை குற்றம் சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.