அஜித்தின் அடுத்த படத்தின் தலைப்பு இந்த தேதியில் வெளியாகிறது!

0
54

அஜித்தின் அடுத்த படத்தின் தலைப்பு இந்த தேதியில் வெளியாகிறது!

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, ரசிகர்களின் இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பிறகு, அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தை எச்.வினோத் இயக்க போனி கபூர் தயாரித்திருந்தார்.

இதையடுத்து, அஜித் தனது அடுத்த படத்திற்காக எச்.வினோத் மற்றும் போனி கபூருடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். வலிமை பட வெளியீட்டிற்கு முன்பே இதற்கான அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித் தற்போது நடிக்கவுள்ள படத்தில் அஜித்தின் தோற்றத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் நிழல்படமாக வெளியிட்டிருந்தார் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்.

இதனிடையே இந்த மாதம் (மார்ச்) 9-ந் தேதி படத்திற்கான பூஜை போடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, இந்த மாதம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வருகிற 19-ந் தேதி படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், அன்றைய தினமே படத்தின் தலைப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களிலும் அஜித்தே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘வலிமை’ படத்தை போன்று இல்லாமல் இந்த படத்தை விரைந்து முடித்து இந்தாண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி படத்தின் நடிகர் மற்றும் நடிகைகளுக்கான தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

author avatar
Parthipan K