Connect with us

Uncategorized

பணத்தை வைத்து வெற்றி பெற்ற அதிமுக! எதிர்க்கட்சித் தலைவர் ஆவேசம்!

Published

on

மத்தியிலேயே ஆண்டு கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி, மற்றும் அதனுடைய அதிகாரபலம் ஒருபுறம், மாநிலத்திலே ஆண்டு கொண்டிருக்கும் அதிமுக மற்றும் அதனுடைய பணபலம் மறுபுறம், இந்த இரு கட்சிகளும் தமிழ்நாட்டிலே இருக்கின்ற அனைத்து ஊடகங்களின் விலைக்கு வாங்கிவிட்டார்கள் நமக்கு எதிரான செய்திகளை இந்த ஊடகங்கள் அனைத்தும் வெளியிடுகிறார்கள் என்பது மட்டும் கிடையாது. பாரதிய ஜனதா மற்றும் அதிமுகவின் ஒரு ஆட்டுவிக்கும் கருவியாகவே அனைத்து ஊடகங்களும் மாறிவிட்டன என்பதுதான் இன்னொரு பக்கம் என்று தெரிவித்தார் ஸ்டாலின்.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள், மற்றும் ஒன்றிய நகர பேரூராட்சி செயலாளர்கள், மற்றும் பகுதி கழகச் செயலாளர்கள், ஆகியோர் பங்கேற்ற நிகழ்வில் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

Advertisement

அதோடு இந்த மூன்று பக்க தாக்குதலை நம்முடைய கட்சி எதிர்கொண்டே ஆகவேண்டும். பணத்தை வைத்து அதிமுக வெற்றி பெற்று விட்டது என்று தெரிவித்து விட இயலாது. பணமா மக்கள் மனமா என்று பார்த்தால், பணத்தை வெல்லும் சக்தி என்பது மக்கள் மனதிற்கு உள்ளது. அந்த மக்களுடைய மனதை நாம் வென்றாக வேண்டும் அதற்காக தான் பிரசார வியூகம் வகுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த மூன்று முனை தாக்குதலை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக வேண்டும் என்று தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

இப்பொழுது என்ன தான் ஊடகங்களை எதிர்க்கட்சித் தலைவர் சாடி பேசினாலும் கூட, ஒரு காலத்தில் அனைத்து ஊடகங்களும் திமுகவிற்கு சார்பாக தான் இருந்தது என்பது ஊரறிந்த உண்மை, இதனால் பல ஊடகங்களும் விமர்சனத்திற்கு உண்டாக்கப்பட்டன. அதைவிட கொடுமை என்னவென்றால் இன்றைக்கு தமிழகத்திலே இருக்கக்கூடிய ஊடகங்களில் அனேக ஊடகங்கள் திமுக நடத்துவதுதான் என்பதுதான் கசப்பான உண்மை. காலம் அனைத்தையும் மாற்றிவிடும் என்று சொல்வார்களே அதே போல் காலம் செல்ல செல்ல திமுகவின் சுயரூபம் ஊடகங்களுக்கு தெரியவந்ததும், ஊடகங்கள் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். அதோடு மட்டுமல்ல திமுகவின் முக்கிய நபர் ஒருவர் சில காலங்களுக்கு முன்பு ஊடகங்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதும் அனைவருக்கும் தெரியும். விவகாரம் இவ்வாறு இருக்க ஊடகங்களை மட்டும் குறை சொல்வது எந்த வகையில் நியாயம் என்று கேட்கிறார்கள் ஆளும் தரப்பில் இருப்பவர்கள்.

Advertisement

அதோடு பணம் என்று வைத்துக்கொண்டாலும் எதிர்க்கட்சியான அதிமுக இடம் இல்லாத பணம் ஒன்றும் எங்களிடம் இல்லை அவர்கள்தான் உலக பணக்கார வரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறார்கள். ஏதோ அரசியல் ஆதாயத்திற்காக ஆளும்கட்சியின் திட்டங்களை குறை சொல்வதை போல இப்பொழுது ஊடகங்களை குறை கூறுகின்றது திமுக என்று ஆதங்கம் தெரிவிக்கிறார்கள் ஊடகத்துறையில் இருப்பார்கள்.

Advertisement