மாநிலங்களவையின் பதினோரு எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவு!தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட அவை!

0
82

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும்.ஆனால் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போன நடப்பாண்டு கூட்டுதொடர் இந்த மாதம் 14 ஆம் தேதி தொடங்கியது.

கடும் சுகாதார கட்டுப்பாடுகள் நிலவிய பொழுதும் 26 எம்பிக்களுக்கு குழு உறுதி செய்யப்பட்டதால் அக்டோபர் 1 ஆம் தேதியோடு கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்து விடலாம் என்று மத்திய அரசு திட்டமிட்டது.

இன்று முக்கிய மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதும் கூட்டத்தொடர் நிறைவடைவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.அத்துடன் மட்டுமல்லாமல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.5ம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்த கூட்டுதொடர் எட்டு நாட்களுக்கு முன்பாகவே அவை நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பத்து நாட்கள் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.பதவிக்காலம் நிறைவடைய உள்ள உறுப்பினர்களின் பெயரை மாநிலங்களவையில் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று அறிவித்து அவர்களுக்கு பாராட்டையும் தெரிவித்தார்.ஓய்வு பெறும் உறுப்பினர்கள் நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து பொதுவாழ்வில் சேவை செய்ய வாழ்த்துக்களையும் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களை சேர்ந்த சத்ரபால் சிங் யாதவ், ஜாவேத் அலி கான், பி.எல் புனியா, ரவி பிரகாஷ் வர்மா, ராஜா ராம், ராம் கோபால் யாதவ், வீர் சிங், ஹர்தீப் சிங் புரி, நீரஜ் சேகர், அருண் சிங், ராஜ் பப்பர் ஆகியோர் நவம்பர் மாதத்துடன் ஓய்வு பெறவுள்ளனர்.

author avatar
Parthipan K