ஜல புல ஜங் போட்ட  வகுப்பாசிரியர்கள் சட்டையை கழற்றி ஆட்டம் போட்ட  ஆசிரியர்கள்? கொதித்தெலும்பிய மாணவர்களின் பெற்றோர்கள்!

0
68
the-teachers-who-put-on-jala-pula-jung-took-off-their-shirts-and-played-the-game-parents-of-angry-students
the-teachers-who-put-on-jala-pula-jung-took-off-their-shirts-and-played-the-game-parents-of-angry-students

ஜல புல ஜங் போட்ட  வகுப்பாசிரியர்கள் சட்டையை கழற்றி ஆட்டம் போட்ட  ஆசிரியர்கள்? கொதித்தெலும்பிய மாணவர்களின் பெற்றோர்கள்!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு சீத்தாம்பூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி  செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியை சுற்றி பல கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றார்கள்.இப்பள்ளியில் வகுப்பாசிரியர்களாக ரமேஷ் இவருடைய வயது 40 மற்றும் புண்ணியமூர்த்தி இவருடைய வயது 30.

இந்த  இரண்டு ஆசிரியர்களும்  கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு ஆசிரியைகளுடன் முன்னாடி தன் சட்டைகளையும் மற்றும் மேலாடைகளை கழற்றிவிட்டு ஆட்டம் போட்டு கொண்டிருந்தனர். பின்னர் அங்குள்ள ஆசிரியைகளை தொட்டும் அவர்களை வற்புறுத்தி ஆட்டம் போட வைப்பதும் போன்ற செயல்களை செய்து கொண்டிருந்தார்கள்.

இதைப் பார்த்த மாணவர்களின்  பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கல்வியை கற்பித்து தரும் ஆசிரியர்களே இச்செயலைச் செய்தால் மாணவர்கள் ஏன் செய்ய மாட்டார்கள் என்ற கேள்வியும் அவர்களிடம் எழும்பியது. பின்னர் இது குறித்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.

இதற்கிடையே சட்டை இல்லாமல் இருந்த அந்த ஆசிரியர்கள் இருவரையும் வாத்தலை போலிசாரிடம்  புகார் செய்தார்கள். அதில் இந்த இரு ஆசிரியர்களும்  கூறியதாவது ,நாங்கள் மலையில் நனைந்து கொண்டு சென்றதால் துணிகள் எல்லாம் ஈரமாக இருந்தது. அதனால் அத்துணிகளை கழற்றி உலர்த்தி  கொண்டு இருந்தேன் என்றும் அதை பார்த்த ஆசிரியைகள் உதவி செய்ததாகவும் கூறினார்கள்.

மேலும் இதனை தவறாக சித்தரித்து வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாக கூறினார்கள். ஆகவே இவற்றில் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர்.இந்நிலையில் எதார்த்தாமாக  ஆய்வுக்கு வந்த முசிறி நீதிமன்ற நீதிபதி இந்த புகாரை  பெற்று திருச்சி புகார் நகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார். சம்பவத்தை குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் கேட்டபோது இந்த இருவரும் ஏற்கனவே சித்தாம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்பு பணியாற்றி இருக்கின்றார்கள் எனவும் ஆனால் 2019 ஆம் ஆண்டு அவர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. எனவே அவர்கள் பணியில் இருந்த போது எடுத்த புகைப்படமா அல்லது தற்போது எடுத்த புகைப்படமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இப்போது எடுக்கப்பட்டிருந்த புகைப்படமா இருந்தால் எதற்காக அந்தப் பள்ளிக்குச் சென்றார்கள் என பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இப்புகைபடத்தின் உண்மை தன்மையை குறித்து மேலும் தொடர்ந்து ஆய்வு நடந்து வருகின்றார்கள்.இந்த காட்சி முகநூலில் வேகமாக வைரலாகி வருகிறது.

தவறான பாதைக்கு செல்லும் மாணவர்களை நல்வழிப்படுத்தி வாழ்க்கையில் உயர்த்தி விடுவே ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட ஆசிரியர்களே இச்செயலை செய்தால் மாணவர்களின் கதி என்னாகுமோ என்றுதான் பெற்றோர்களின் வயிற்றேரிச்சல்.

author avatar
Parthipan K