சட்டை இறுக்கம் என பள்ளி மாணவனை துவைத்து எடுத்த ஆசிரியர்! பலத்த காயங்களோடு அரசு மருத்துவமனையில் அனுமதி! கோவையில் பரபரப்பு!

0
118
The teacher who washed the school student as the shirt tightened! Admitted to Government Hospital with serious injuries! Excitement in Coimbatore!
The teacher who washed the school student as the shirt tightened! Admitted to Government Hospital with serious injuries! Excitement in Coimbatore!

சட்டை இறுக்கம் என பள்ளி மாணவனை துவைத்து எடுத்த ஆசிரியர்! பலத்த காயங்களோடு அரசு மருத்துவமனையில் அனுமதி! கோவையில் பரபரப்பு!

கோவை கணபதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் ஒருவர். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறான். பள்ளி மாணவர்கள் அனைவருக்குமே நேற்று முன்தினம் சீருடை வழங்கப்பட்டது. அதை வாங்கிக் கொண்டு அந்த மாணவன் வீட்டிற்குச் சென்று அதனை அணிந்து பார்த்துள்ளான். அப்போது சட்டை மிகவும் பெரிதாக இருந்துள்ளது.

அதனால் சீருடையை தனது தாயாரிடம் கொடுத்து சரியான அளவில் தைத்துக் கொடுக்குமாறு கூறியுள்ளார். அவரும் சட்டையை மாணவன் கேட்டது போல தைத்துக் கொடுத்துள்ளார். இந்த சட்டையை அணிந்துகொண்டு பிளஸ் 1 மாணவன் வழக்கம் போல இன்று காலை பள்ளிக்கு சென்று வகுப்பறையில் அமர்ந்து இருந்தான். அப்போது அந்த வகுப்பிற்கு வந்த இயற்பியல் ஆசிரியர் மாணவனை எதற்காக இவ்வளவு இறுக்கமாக சட்டை அணிந்து உள்ளாய் என கேட்டார்.

அதற்கு அந்த மாணவன் ரொம்ப பெரியதாக இருந்தது. அதனால் அப்படி மாற்றி தைத்துக்  கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். மாணவன் கூறிய பதிலால் திருப்தி அடையாத ஆசிரியர் இவ்வாறு சட்டை அணியக்கூடாது என கூறி அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் வலி தாங்க முடியாத அந்த மாணவன் அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்த வகுப்புகளில் இருந்த ஆசிரியர்கள் ஓடி வந்து அந்த மாணவனை ஆசிரியரிடமிருந்து மீட்டு உள்ளனர்.

இதில் அந்த மாணவனுக்கு கை, காது, மூக்கு உள்பட பல்வேறு பகுதிகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இது குறித்து தனது பெற்றோரிடமும் மாணவன் கூறியுள்ளான். எனவே பெற்றோர் பள்ளிக்கு வந்த மாணவனை உடனே அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து மாணவனின் பெற்றோர் நடந்த இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசிலும் புகார் செய்துள்ளனர். அதன்பேரில் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.