இவர்களை தலீபான்கள் தடுக்க கூடாது! இத்தனை நாடுகளா வலியுறுத்தியது?

0
67
The Taliban should not stop them! So many countries insisted?
The Taliban should not stop them! So many countries insisted?

இவர்களை தலீபான்கள் தடுக்க கூடாது! இத்தனை நாடுகளா வலியுறுத்தியது?

தற்போது ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றி விட்டனர். மிகப்பெரிய மாகாணங்கள் எல்லாவற்றையும் பெரும்பாலும் கைப்பற்றி விட்டனர். அதன் காரணமாக ஆப்கன் தலைவர் அங்கிருந்து வெளியேறி விட்டார். அதை தொடர்ந்து அனைத்து நாடுகளும் அங்குள்ள தனது நாட்டு மக்களை வெளியேறச் சொல்லி கேட்டுக் கொண்டுள்ளன.

தலீபான்கள் பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடம் அளிக்க மாட்டோம் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்கா தனது படைகளை ஆப்கனிலிருந்து திரும்பப் பெற ஒப்புக்கொண்டது. அதன்படியே கடந்த ஜூன் மாத இறுதியில் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன. 90 சதவிகித அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், இதுவரை பதுங்கியிருந்த தாலிபான்கள் தற்போது சிறிது சிறிதாக ஆப்கானிஸ்தான் மீது பாய தொடங்கி உள்ளனர்.

அமெரிக்க படைகள் வெளியேறிய தொடங்கிய சில வாரங்களிலேயே தலிபான்கள் அவர்களது வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டனர். ஆப்கானிஸ்தானின் பல்வேறு முக்கிய நகரங்கள், அண்டை நாடுகளுடனான எல்லைப் பகுதிகளையும் கைப்பற்றி விட்டனர். அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களில் மட்டும் பெரும்பாலான மாகணங்கள் அனைத்தையும் தலிபான்கள் தங்கள் கைவசம் ஆக்கியுள்ளனர்.

இதே வேகத்தில் அவர்கள் முன்னேறும் நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்ற கூடும் என்ற அச்சம் நிலவி வந்தது. அதனை தொடர்ந்து நேற்று தலிபான்கள் காபூல் நகரையும் கைப்பற்றினர். எனினும் தலீபான்கள் படை பலத்தை பயன்படுத்தி கைப்பற்ற விரும்பவில்லை எனவும் தெரிவித்தனர். அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும் கூறினார்கள்.

அதன் பிறகு காபூல் நகரம் தங்கள் வசம் ஆனது தொடர்ந்து வன்முறையை உடனடியாக நிறுத்தும்படி போராளிகளுக்கு தலிபான் அமைப்பு உத்தரவுகளை இட்டது. அமெரிக்க இராணுவ வீரர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது வரை விமான நிலையங்கள், மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப் படும் என்றும், அவற்றுக்கான விநியோகம் நிறுத்தப்படாது என்றும்  பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.

அதேபோல வெளிநாட்டவர்கள் விரும்பினால் இங்கிருந்து தாராளமாக வெளி ஏறலாம் அல்லது தொடர்ந்து இங்கேயே இருக்க வேண்டும் என்றாலும் பதிவு செய்துகொண்டு இருக்கலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர். எனினும் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதால் பீதி அடைந்த உள்ளூர் அரசு அதிகாரிகள் பலரும் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்காக விமான நிலையங்களில் குவிந்துள்ளனர்.

அதேபோல் காபூல் நகரை சேர்ந்த பொதுமக்களும் உயிருக்கு பயந்து அண்டை நாடான பாகிஸ்தானை நோக்கி படையெடுத்து செல்கின்றனர். ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அந்நாட்டு மக்களையும், வெளிநாட்டவர்களும் செல்வதற்கு எந்த இடையூறுமின்றி அனுமதிக்க வேண்டும் என்று சில நாடுகள் கேட்டுக் கொண்டு உள்ளது.

அதில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற 60க்கும் மேற்பட்ட நாடுகள் இதை வலியுறுத்தி உள்ளன. சாலைகள், விமான நிலையங்கள் என அனைத்து போக்குவரத்து பாதைகளும் தொடர்ந்து திறந்தே இருக்க வேண்டும் என்றும் அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.