பிரபல யூடியூபரிடம் கைவரிசை காட்டிய துணை நடிகை! குழந்தைகளை மறைத்து திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி!

0
81
The supporting actress who showed her hand to the famous YouTuber! Promise to hide children and get married!
The supporting actress who showed her hand to the famous YouTuber! Promise to hide children and get married!

பிரபல யூடியூபரிடம் கைவரிசை காட்டிய துணை நடிகை! குழந்தைகளை மறைத்து திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி!

சில பெண்கள் திருமணம் ஆகாத ஆண்களை காதல் வலையில் விழ வைத்து தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதேபோல கொடைக்கானலை சேர்ந்த பகலவன் ராஜா என்பவர் ஒரு யூட்யூபில் தனக்கென்று ஒரு சேனலை நடத்தி வருகிறார். இவர் தனது யூடியூப் சேனலில் ஷார்ட் பிலிம்,பாடல் போன்ற தொகுப்புக்களை தயாரித்து அப்லோட் செய்வது வழக்கம். அவ்வாறு துணை நடிகையான திவ்யா பாரதி என்பவரை தான் எடுக்கும் ஷார்ட் ஃபிலிமில் நடிக்க வைத்து வந்துள்ளார். நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

யூட்யூபில் சேனல் நடத்தும் பகலவன் ராஜா என்பவரிடம் துணை நடிகை திவ்யா பலமுறை பணம், தங்கம் போன்றவற்றை வாங்கியுள்ளார். இவரும் தனது காதலி தான் கேட்கிறார் என நம்பி அவர் வீட்டிற்கு தேவையான பொருட்கள் என இதுவரை 30 லட்சம் வரை செலவு செய்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல பகலவன் ராஜ் திவ்யாவை திருமணம் செய்ய வற்புறுத்தி உள்ளார்.

ஆனால் திவ்யாவோ திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். சந்தேகம் அடைந்த பகலவன் ராஜா திவ்யாவை குறித்து விசாரித்துள்ளார். அப்பொழுது பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளது. துணை நடிகையான திவ்யாவிற்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதாக கூறியுள்ளனர். இந்த தகவலை அறிந்த பகலவன் ராஜா இரண்டு குழந்தைகள் இருப்பது மறைத்து தன்னை காதலித்து ஏமாற்றியதாக துணை நடிகை திவ்யபாரதி மீது மோசடி புகார் கொடுத்துள்ளார்.