மங்காத்தா இரண்டாம் பாகத்திற்கான கதை தயார்! அஜித் அழைத்தால் உடனே ஆரம்பம்!!

0
78

மங்காத்தா இரண்டாம் பாகத்திற்கான கதை தயார்! அஜித் அழைத்தால் உடனே ஆரம்பம்!!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா. இந்த படம் அஜித்தின் 50-வது திரைப்படமாகும். இது அஜித்தின் 50-வது திரைப்படம் என்பதால் ரசிகர்கள் இந்த படத்தை ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை செய்தது. இந்த படத்தில் திரிஷா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் ஆகியோர் நடித்திருந்தனர். அதிலும் இந்த படத்தில் அஜித் எதிர்மறை (வில்லன்) கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்த அஜித்தின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்போதைய காலத்தில் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்படுமா? என அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முயற்சிகள் நடந்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதையடுத்து சமீபத்தில் வெங்கட் பிரபு அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை ஏற்கனவே தயார் செய்து விட்டதாகவும், எனவே அஜித் என்னை எப்போது அழைத்தாலும் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க நான் தயாராக இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K