புயல் உருவாகிறது! வானிலை மையம் எச்சரிக்கை!! மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்!!!

0
60

புயல் உருவாகிறது! வானிலை மையம் எச்சரிக்கை!! மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்றது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும். அதனை தொடர்ந்து இன்றிரவு புயலாக வலுப்பெறும்.

புயலின் காரணமாக இன்று அந்தமான் கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் மியான்மர் கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும், இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் இருக்கும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

author avatar
Parthipan K