நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! தேர்தல் ஆணையத்தை வைத்து மறைமுகமாக காய் நகர்த்தும் ஆளும் தரப்பு! கனவுகள் பலிக்குமா?

0
66

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று பலமுறை உச்ச நீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும், பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கடந்த 26ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது.அதனைத் தொடர்ந்து கடந்த 28ம் தேதி இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி கடந்த 5ஆம் தேதி முடிவடைந்தது.

இதனையடுத்து தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான அறிவிப்பு சென்ற 26 ஆம் தேதி வெளியானது. அந்த சமயத்திலேயே நோய் தொற்று பரவல் காரணமாக பிரச்சாரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

உள் அரங்கத்தில் பிரச்சாரம் செய்யவும் வேட்பாளரும் அவருடன் 3 பேர் மட்டுமே வீடுதோறும் சென்று பிரச்சாரம் செய்யலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டது. சமீபத்தில் பிரச்சாரத்தில் ஒரு சில தளர்வுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதனடிப்படையில், திறந்தவெளியில் 1000 பேர் வரையில் பங்கேற்கும் விதத்திலான பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம் 20 பேர் வரையில் வீடுதோறும் சென்று ஓட்டுக்களை சேகரிக்கலாம் என நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகின்ற சூழ்நிலையில், பிரச்சாரத்தில் கூடுதல் தகவல்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

என்னதான் தேர்தல்ஆணையம் இதுதொடர்பான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தாலும் இதன் பின்னணியில் ஆளும் தரப்பு இருப்பதாகவே பலரும் கருதுகிறார்கள்.

திமுகவைப் பொறுத்தவரையில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை கைப்பற்றவேண்டும் என்பதே அந்த கட்சியின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.

அதற்காக பல அதிரடி வியூகங்களை அந்த கட்சி வகுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே தேர்தல் ஆணையத்தை வைத்து இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதிலும் குறிப்பாக நோய்த்தொற்று தமிழ்நாடு முழுவதும் குறைந்து வருகிறது என்ற அறிவிப்பே திமுகவின் தேர்தல் ராஜதந்திர நடவடிக்கை தான் என்றும் ஒரு சிலர் தெரிவித்து வருகிறார்கள்.

நிச்சயமாக தேர்தல் முடிவுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் இந்த ஊரடங்கு தளர்வுகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் தேர்தல் நடக்க வேண்டும், அதில் திமுக முழுமையான வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்திற்காகவே ஆளும் தரப்பு இவ்வாறான நடவடிக்கைகளை மறைமுகமாக எடுத்து வருகிறது என்றும், சிலர் கருதுகிறார்கள்.

எது எப்படியோ தேர்தல் நாளன்று வாக்களிக்கும் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறதோ அப்படித்தான் ஓட்டுக்கள் விழும் என்றால் அதில் நிச்சயமாக அனைவரும் கவனம் செலுத்த வேண்டும், என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.

ஆனாலும் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தை தன்னுடைய கைக்குள் வைத்திருக்கிறது திமுக என்பது போன்ற விமர்சனங்களும் ஆளும் தரப்பை நோக்கி எழத்தான் செய்கிறது. இருந்தாலும் அரசியல் அதிகாரத்தில் இருக்கும் ஆளும் தரப்பு இதனை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.