காமன்வெல்த் போட்டிகளில் இருந்து மாயமான இலங்கை வீரர்கள்… அதிர்ச்சி தகவல்!

0
70

காமன்வெல்த் போட்டிகளில் இருந்து மாயமான இலங்கை வீரர்கள்… அதிர்ச்சி தகவல்!

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பகுதியில் காமன்வெல்த் போட்டித் தொடர் தற்போது நடந்து வருகிறது.இங்கிலாந்தில் தற்போது 71 ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகின்றன.

இதற்காக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர். இலங்கை சார்பாக 52 வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் என மொத்தம் 161 பேர் இங்கிலாந்து சென்ற நிலையில் தற்போது அங்கிருந்து இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மல்யுத்த வீரர் யோட பெடிகே ஷானித் சதுரங்க, ஜூடோ வீராங்கனை மரப்புலிகே சமிலா திலானி மற்றும் ஜூடோ அதிகாரி டிக்கிரி ஹன்னடிகே துமிந்த அசேல டி சில்வா ஆகியோர் காணாமல் போனதை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிசார் யார் கண்டுபிடிக்கப்பட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தவில்லை, மேலும் காணாமல் போன மூன்றாவது நபர் குறித்த விசாரணையைத் தொடர்வதாகவும் கூறினார்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த நாட்டில் போராட்டங்கள் ஆட்சி மாற்றம் என ஸ்திரத்தன்மையற்ற நிலை உள்ளது. இதற்கிடையில் வெளிநாட்டில் இதுபோல வீரர்கள் மாயமானது அந்த நாட்டுக்கு மற்றொரு அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

சமீபத்தைய தகவலின் படி மாயமானவர்களில் 2 பேரை இங்கிலாந்து போலிஸார் கண்டறிந்து விட்டதாகவும், ஒருவரின் இடம் மற்றும் இன்னும் தெரியவில்லை என்று சொல்லப்படுகிறது.