Connect with us

Breaking News

குரூப் 4 தேர்வில் முதல் இடம் பிடித்தவரின் உளறல் பேச்சு! இவர் எப்படி முதலிடம் வந்தார்? தேர்வர்கள் கேள்வி

Published

on

Group 4 exam result after 8 months! The website gave a shock to the candidates!

குரூப் 4 தேர்வில் முதல் இடம் பிடித்தவரின் உளறல் பேச்சு! இவர் எப்படி முதலிடம் வந்தார்? தேர்வர்கள் கேள்வி

குரூப் 4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த பாலமுருகன், மன்னார் வளைகுடா பாக் ஜல சந்தி கட்ச் வளைகுடா ஆகியவை இந்தியாவில் இருக்கிறது என்றும், ஆனால் ஆசியாவில் இல்லை என்றும் கூறியிருப்பது, சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது . தான் படித்த பயிற்சி நிறுவனத்தில் பாராட்டு விழா நடந்த போது, எக்குத்தப்பாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது .

Advertisement

கடந்த 24 ஆம் தேதி மாலை ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. நன்றாக படித்தவர்களுக்கு சரியான மதிப்பெண் அளிக்கப்படவில்லை என்றும், அதே நேரத்தில் குறிப்பிட்ட மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், தென்காசியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தின் கிளை கடலூரில் இயங்கி வருகிறது . கடலூரில் படித்த பாலமுருகன் என்பவர், மாநில அளவில் குரூப் 4 தேர்வில் முதலிடம் பிடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு நடத்திய பாராட்டு விழாவின்போது பேசிய பாலமுருகன், எக்குதப்பாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement