‘பீஸ்ட்’ படத்தில் விஜய் பாடியுள்ள பாடல் இந்த தேதியில் வெளியாகிறது!

0
73

‘பீஸ்ட்’ படத்தில் விஜய் பாடியுள்ள பாடல் இந்த தேதியில் வெளியாகிறது!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து தற்போது உருவாகியுள்ள படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.

‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதையடுத்து ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக அரபிக்குத்து பாடலின் லிரிக்கல் வீடியோ கடந்த பிப்ரவரி 14-ந் தேதி வெளியானது. அரபிக்குத்து பாடலின் ப்ரோமோவில் இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இதனை தொடர்ந்து படத்தின் அடுத்த பாடலை வருகிற 19-ந் தேதி (நாளை மறுநாள்) வெளியிட உள்ளதாக ‘பீஸ்ட்’  படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நேற்று அறிவித்துள்ளது. இந்த பாடலின் ப்ரோமோ வீடியோவில் விஜய், நெல்சன், அனிருத் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி தற்போது வெளியாக உள்ள ‘ஜாலியோ ஜிம்கானா’ என்னும் அந்த பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு படத்தின் மோஷன் போஸ்டர் இன்று (வியாழக்கிழமை) வெளியாக உள்ளதாக அந்த படத்தில் நடித்துள்ள நடிகர் ரெடின் கிங்ஸ்லி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். படக்குழுவின் அடுத்தடுத்த அப்டேட்டுகளால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

author avatar
Parthipan K