செல்போனில் கேம் விளையாடி ரூ.5 லட்சத்தை செலவிட்ட மகன் பணத்தை பரி கொடுத்த பெற்றோர்!

0
77

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம்,அமலாபுரத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது தாயாரின் செல்போனில் ஃப்ரீ பையர் எனும் ஆன்லைன் விளையாட்டை பதிவிறக்கம் செய்து விளையாடி வந்துள்ளார்.

இவரது தந்தை குவைத்தில் வேலை பார்த்து வருகிறார் இவர் தனது வீட்டிற்கு மாதம் ஒரு முறை அவரது மனைவியின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுவன் ஃப்ரீ ஃபயர் விளையாட்டை அவரது தாயாரின் செல்போனில் விளையாண்டு வந்துள்ளார். இவர் கூடுதலாக ஆயுதங்களை வாங்குவதற்காக தாயாரின் வங்கிக் கணக்கிலிருந்து சிறிது சிறிதாக அந்த விளையாட்டின் ஆயுதங்களை வாங்க பணத்தை செலவிட்டுள்ளார்.

ஒரு சில நாட்களிலேயே வங்கி கணக்கில் இருந்த ரூ.5.40 லட்சம் ரூபாயையும் முழுமையாக அவரது தாயாரின் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் அவரது தாயார் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்காக நேற்று ஏடிஎம் சென்றுள்ளார்.வங்கி கணக்கில் பணம் இல்லை என தெரிந்த அவர் அதிர்ச்சி அடைந்து உடனே வங்கிக்கு சென்று விசாரித்தபோது பணம் சிறிது சிறிதாக கடந்த 3 நாட்களாக எடுக்கப்பட்டுவிட்டதாக அந்த வங்கியின் மேலாளர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவர் தனது மகனுடன் அமலாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதனை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

author avatar
Parthipan K