டாக்டர் கொடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்.. மருத்துவமனைக்கு விரையும் முதல்வர்! தீவீர சிகிச்சையில் திமுக அமைச்சர்!

0
91
The secret report given by the doctor.. The Chief Minister rushes to the hospital! DMK minister in intensive care!
The secret report given by the doctor.. The Chief Minister rushes to the hospital! DMK minister in intensive care!

டாக்டர் கொடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்.. மருத்துவமனைக்கு விரையும் முதல்வர்! தீவீர சிகிச்சையில் திமுக அமைச்சர்!

திமுகவின் மூத்த நிர்வாகி மற்றும் அமைச்சருமான துரைமுருகனுக்கும் சில நாட்களாக உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை அடுத்து  திடீரென்று உடல்நலக் குறைவு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அச்சமயத்தில் அவரை அப்போலா மருத்துவமனையில்அனுமதித்தனர்.அவருக்கு  சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட அமைச்சர் துரைமுருகனுக்கு அவ்வப்போது உடல்நிலையில்  சிறிதளவு மாற்றம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்வது வழக்கம்.

அதேபோல சில நாட்களுக்கு முன்பும் அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.மீண்டும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.ஆனால் அவருக்கு சரிவர உடல்நிலை குணமாகாததால் மீண்டும் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு மருத்துவர்கள் தீவீர சிகிச்சை அளித்து வருவதாக கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி இவரது உடல்நிலை மோசமாக இருப்பதையடுத்து முதல்வர் ஸ்டாலின் இவரை காண மருத்துவமனைக்கு செல்வதாக கூறியுள்ளனர்.இதனையடுத்து அவரது உடல்நிலை குறித்து எந்த ஒரு அறிக்கையும் தற்பொழுது வரை மருத்துவர்கள் வெளியிடப்படவில்லை.70 வயது கடந்த நிலையில் தற்போது இவருக்கும் உடல் உபாதைகள் அதிக அளவில் எற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.