புதுவையில் கடல் நிறம் திடீரென மாறியது! மக்கள் கடும் அதிர்ச்சி!

0
91
The sea color suddenly changed in Puduvai! People are shocked!
The sea color suddenly changed in Puduvai! People are shocked!

புதுவையில் கடல் நிறம் திடீரென மாறியது! மக்கள் கடும் அதிர்ச்சி!

புதுவையில் வார இறுதி நாட்களில் கடற்கரை அருகே சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கமான ஒரு விஷயம் தான். அது போல் நேற்றும் கடற்கரை, பாரதி பூங்கா, நோனங்குப்பம், படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

மேலும் கடற்கரை சாலையில் தலைமைச் செயலகம் முதல் பழைய துறைமுக பாலம் வரை செயற்கை மணல் பரப்பு உருவாகி உள்ளதால் அங்கு கடலில் இறங்கிய பொதுமக்கள் விளையாடி மகிழவும் செய்தனர். கடந்த சில நாட்களாகவே புதுவையில் தேங்கிய மழைநீருடன், சாக்கடை தண்ணீரும் தற்போது கடலில் அதிக அளவில் கலந்து வருகிறது. அதே நேரத்தில் முகத்துவாரம் பகுதியில் தூர்வாரப்படும் மணலும் அங்கு கொட்டப்படுகிறது.

இதனால் பழைய கோர்ட் கட்டிடம் முதல் அருகில் கழிவுநீர் அதிகம் கலப்பதாலும், பிளாஸ்டிக் கழிவுகள், அழுகிய தாவரங்கள் மற்றும் ஆகாயத்தாமரை செடிகள் அங்கேயே தேங்கி அந்த பகுதியில் கடல் நீர் நிறம் மாறியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் இதன் காரணமாக அங்கு மிகுந்த துர்நாற்றம் வீசியது. இதைப் பார்த்து அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் முகம் சுளித்ததோடு, கடலில் இறங்காமலும், கால் நனைக்காமலும் பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஆனால் உள்ளூர் மக்கள் கடல் நீரின் நிறம் மாறுவதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் தலைமை செயலகம் அருகே உள்ள செயற்கை மணல் பரப்பு பகுதியில் வழக்கம் போலவே ஏராளமான மக்கள் குவிந்தனர். மேலும் அவர்கள் கடலில் இறங்கி விளையாடி, நீராடி, மகிழ்ச்சியும் அடைந்தனர். சண்டே மார்க்கெட் பகுதிகளில் செயல்படும் காந்தி வீதியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என கூட்டம் கூட்டமாக மக்கள் அலை மோதினர். இதையொட்டி அங்கு ரோந்து சென்ற போலீசார் ஒலிபெருக்கி மூலம் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி சென்றனர்.