12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியிடப்படும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

0
147
#image_title

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியிடப்படும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து 12 ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 8 ந் தேதி காலை 9.30 மணிக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான 2022-23 ம் கல்வியாண்டிற்கான 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு , மார்ச் 13 ந் தேதி துவங்கி, ஏப்ரல் 3 ந் தேதி முடிவடைந்தது. இந்தத்தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதியுள்ளனர்.

இந்த நிலையில், அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள், மே 8 ம் தேதி காலை 9.30 மணி அளவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிடுகிறார்.

தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இன்றி தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளத்தின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலுடன் கூடிய தேர்வு முடிவுகளையும் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

முதலில் மே ஐந்தாம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது . ஆனால் மே 7ஆம் தேதி நீட் தேர்வுகள் நடைபெறுவதால், அதற்கு முன்னதாக தேர்வு முடிவுகள் வெளியிட்டால் அது மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் என்பதால், தற்போது நீட் தேர்வு நடந்து முடிந்த பிறகு மறுநாள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Savitha