முதல்வரின் தந்திரத்தை உடைத்தெறிந்த டாக்டர் ராமதாஸ்!

0
65

சாதிவாரி கணக்கெடுப்பு காக தனி வாரியம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கின்றன நிலையில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் காலம் தாக்குவதற்கான முயற்சி தான் இந்த நடவடிக்கை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்து பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக சென்னையில் நேற்றைய தினம் ஒரு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டு இருக்கின்ற நிலையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தனியாக ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கின்றார் இன்றைய நிலையில் இதே வன்னியர்களின் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கையை தாமதப்படுத்தும் ஒரு முயற்சியாக இருக்கின்றது இது மனநிறைவு கொடுக்கவில்லை என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிகவும் பின் தங்கி இருக்கின்ற வன்னியர் சமுதாய மக்களுக்கு 20 சதவீத தனி இட ஒதிக்கீடு வழங்கிட வேண்டும் என்று 40 வருட காலமாக வன்னியர் சங்கமும் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியும் போராடி வருகின்றன . ஒவ்வொரு முறையும் வன்னியர்களின் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை ஆலோசனை செய்து ஒரு நல்ல முடிவை அறிவிப்பதாக ஆட்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள் ஆனாலும் முடிவில் வன்னியர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.

தமிழகத்தில் இப்போது இருக்கும் அரசிடம் இந்த கோரிக்கையை இப்போது புதிதாக பாட்டாளி மக்கள் கட்சி வைக்கவில்லை கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவருடைய முகாம் அலுவலகத்தில் நானும் பாமகவின் தலைவர் ஜிகே மணி மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் சந்தித்து வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் அதன் பின்பு கடந்த ஒரு வருட காலத்தில் பலமுறை இந்த கோரிக்கையை வலியுறுத்தி இருக்கின்றோம் கடைசியாக கடந்த 23-10-2020 அன்றைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நான் எழுதிய ஒரு கடிதத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது அவசியம் சம்பந்தமாக விரிவாக விளக்கம் அளித்திருந்தேன் அதனடிப்படையில் 20 சதவீத தனி இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் 32வது ஆண்டு விழாவையொட்டி கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற இணையவழி செயற்குழு கூட்டத்திலும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி நடைபெற்ற இணையவழி பொதுக்குழு கூட்டத்தையும் வன்னியர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வழங்க கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன ஆனாலும் அந்த கோரிக்கைகள் சம்பந்தமாக தமிழக அரசிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வராத நிலையில் தான் அந்தக் கோரிக்கையை முன்வைத்து மாபெரும் அறவழிப் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் தலைமையில் வன்னியர் சங்கமும் பாட்டாளி மக்கள் கட்சியும் இணைந்து சென்னையில் நடத்தியிருக்கின்றனர்.

அந்தப் போராட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதிலுமிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாட்டாளி சொந்தங்கள் என்னைக்கு ஒன்றுதிரண்டு அந்த நிலையிலேயே அவர்களில் 95 சதவீதத்தை நிறைவை காவல்துறையினர் கைது செய்தும் திருப்பி அனுப்பியும் சென்னைக்கு வர இயலாமல் செய்து விட்டார்கள் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள இயலாது சமூக நீதியில் அக்கறை கொண்ட அரசு இதை செய்து இருக்காது.

சென்னையில் நடத்தப்பட்ட போராட்டத்தை அடுத்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் போராட்ட குழுவினரை அழைத்து எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள் அந்த பேச்சுவார்த்தையின் போது வழங்கப்பட்டிருக்கின்ற கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் வன்னியர்களின் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரிக்கை சம்பந்தமாக சாதகமான முடிவை அறிவிப்பதாக உறுதி வைத்திருக்கின்றார் அதனடிப்படையில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான முதலமைச்சரின் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ஏமாற்றம் நிறைந்த இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருக்கின்றது.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் பின்பு வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது உடனடியாக நடக்கக்கூடிய ஒரு செயல் கிடையாது வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கையினை நிறைவேற்றாமல் காலம் கடத்தும் ஒரு தந்திர முடிவாகவே தமிழக அரசின் இந்த நடவடிக்கை இருக்கின்றது வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்காமல் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஆணையம் அமைப்போம் என்ற அறிவிப்பு இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக அமையாது இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் வன்னியர் சங்க போராட்ட குழுவினர் மற்றும் அன்புமணி ராமதாஸ் அவர்களையும் முதல்வர் நேரடியாக அழைத்து பேசி இருக்க தேவையில்லை இந்த அறிவிப்பை தன்னிச்சையாகவே அவர் வெளியிட்டு இருக்கலாம் என்று தெரிவித்தார்.

வன்னியர்கள் வேலை வாய்ப்பிலும் கல்வியிலும் காலம்காலமாக பின்தங்கி இருக்கிறார்கள் அவர்களின் கல்வியும் வேலைவாய்ப்பும் தான் பல நூற்றாண்டு காலமாக பின்தங்கியிருக்கும் அந்த சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு ஒரேவழி அப்படி செய்யாமல் இது போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இனிமேலும் காலம் கடத்துவது ஏமாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது எந்த வகையிலும் நியாயம் கிடையாது வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கட்டாயம் கிடையாது மாறாக தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மக்கள்தொகை விவரங்களின் அடிப்படையிலேயே இந்த இட ஒதுக்கீட்டை வழங்கி விடலாம்.

கடந்த காலங்களில் இஸ்லாமியர்கள் மற்றும் அருந்ததியர்களுக்கு ஒதுக்கீடுகள் அவ்வாறுதான் வழங்கப்பட்டன அதேபோல வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீட்டையும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையில் இருந்து பெற்று தமிழக அரசு அறிவித்து விடலாம். ஆகவே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தை அமைப்பது இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வாக இருக்காது மாறாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணையை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் அவர்களுடைய வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார்