துப்பாக மாறிய செருப்பு?..பாழடைந்த கிணற்றில் நிகழ்ந்த பயங்கரம்!. 

0
77
The sandal that became a clue?..The horror that happened in the ruined well!.
The sandal that became a clue?..The horror that happened in the ruined well!.

துப்பாக மாறிய செருப்பு?..பாழடைந்த கிணற்றில் நிகழ்ந்த பயங்கரம்!.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேவுள்ள கூனவேலம்பட்டிபுதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல் நலக்  குறைவால் உயிரிழந்துள்ளார். இவரது மனைவி நிர்மலா.இந்த தம்பதிக்கு  இரண்டு மகன்கள் உள்ளார்கள்.

மூத்த மகன் சக்திவேல் வயது 13. இளைய மகன் சுகவனேஸ்வரன் வயது பதினொன்று. இருவரும் மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலையில் படித்து வந்தார்கள்.வறுமை  காரணமாக பள்ளியிலுள்ள விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் இருவருக்கும் குளிர் ஜுரம் ஏற்பட்டது. இதன் காரணமாக நிர்மலா இருவரையும் தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். பிறகு மருத்துவமனையில் பரிசோதித்து வீடு திரும்பின. மாலையில் சக நண்பர்களுடன் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

சுகவணேஸ்வரன் என்பவர் இரவு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. வெகு நேரம் ஆகியும் தனது மகன் வாராத நிலையில் சந்தேகமடைந்த நிர்மலா உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த மாணவனை தேடினார்கள்.

அப்போது ஆணைகட்டிபாளையம் பகுதியிலுள்ள விவசாயக் கிணறு  ஒன்றில் சுகவனேஸ்வரன் அணிந்திருந்த காலனி ஒன்று தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. உறவினர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்கள்.

தீயணைப்பு வீரர்கள் விரைவாக வந்து சுகவனேஸ்வரனை மீட்டனர். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார். இதனையடுத்து அந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நிர்மலா புதுச்சத்திரம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீஸர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் சக நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சுகவனேஸ்வரன் கால் தவறி வறண்ட கிணற்றுக்குள் விழுந்து இறந்து இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

இதைதொடர்ந்து  போலீசார்கள்  விசாரணை நடத்தி வந்தனர். ராசிபுரம் அருகே விளையாடச் சென்ற மாணவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Parthipan K