மோடிக்கு எதிராக திமுக கையில் எடுத்த அதே ஆயுதத்தை தற்போது ராகுலுக்கு எதிராக கையில் எடுக்கும் பாஜக! கதறும் உடன்பிறப்புகள்!

0
81

அதிமுக ஆட்சி காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி எப்போது தமிழகம் வந்தாலும் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றாக திரண்டு அவருக்கு எதிராக கோபேக் மோடி என்ற முழக்கத்தை முன்வைத்து வந்தனர்.

ஆனால் சமீப காலமாக திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழகத்தில் பிரதமருக்கான எதிர்ப்பு குறைந்திருக்கிறது என்று நான் சொல்ல வேண்டும்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு நாட்டின் பிரதமர் ஒரு மாநிலத்திற்கு அந்த மாநிலத்தின் நலத்திட்ட உதவிகளை துவங்கி வைப்பதற்காகவோ அல்லது வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவோ வருகை தந்தால் அவரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பி அதையே அரசியலாக செய்து வந்தார்கள்.

ஆனால் அரசியல் செய்வதற்காக அதிமுக ஆட்சிக் காலத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது என்ன செய்ததோ அதே செயல் தற்பொழுது திமுகவிற்கு எதிராக வந்து நிற்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

அதாவது, ஸ்டாலின் கோ பேக் மோடி என்று சொன்னார். நாங்கள் கோபேக் ராகுல் என்று சொல்லக்கூடாதா? என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.

திண்டுக்கல்லில் அவர் தெரிவித்ததாவது பாரத் ஜோடோ பாதயாத்திரைக்காக ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். ஆகவே அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக கோபேக் ராகுல் இயக்கத்தை அறிவித்திருக்கிறோம். இதற்காக நாங்கள் தொடர்வண்டியில் கன்னியாகுமரி சென்ற போது காவல்துறையினர் என்னை கைது செய்தார்கள்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் கோ பேக் மோடி இயக்கத்தை நடத்தி வந்தது இந்த நிலையில் ராகுல் காந்திக்கு எதிராக நாங்கள் அதனை செய்யக்கூடாதா? எங்களுடைய போராட்டங்களை தடை செய்ய காரணம் என்ன? திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு முழுமையான அதிருப்தி நிலவி வருகிறது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காமலிருப்பதை ஹிந்து விரோதமாக நாங்கள் கருதுகிறோம்.

அவருடைய மனைவி துர்கா ஆலயங்களில் பூஜைகள் செய்வதை வரவேற்கிறோம். எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், வெற்றி பெறுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.