அனைத்து வைரஸ்களுக்கும் ஒரே தடுப்பூசி!

0
58

அனைத்து வைரஸ்களுக்கும் ஒரே தடுப்பூசி!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில், முதன்முதலாக பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ் அதன் பிறகு, உலகநாடுகள் பலவற்றிலும் இதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. அதிலும் குறிப்பாக, இத்தாலி, இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இந்த கொரோனாவின் தாக்கத்தால் நிலைகுலைந்து போயின.

எனவே, இந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் முழுவதும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக, பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், கொரோனாவை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் உலகநாடுகள் பலவற்றில் தனது கோர தாண்டவத்தை தொடங்கியுள்ளது. குறிப்பாக மற்ற நாடுகளை காட்டிலும், அமெரிக்காவில் இந்த ஓமிக்ரானின் பாதிப்பு அதிகமாகவே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எனவே, தொற்றில் இருந்து மக்களை காப்பதற்காக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொள்வதை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மக்களும் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து தற்போது, தாங்களாகவே முன்வந்து, தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். எனினும், டெல்டா, ஒமிக்ரான் என கொரோனா அடிக்கடி உருமாற்றம் பெற்று கொண்டு இருப்பதால் அதை சமாளிப்பதில் மருத்துவ நிபுணர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

இந்த நிலையில் அனைத்து வகை கொரோனா வைரஸ்களையும் எதிர்த்து செயல்படக் கூடிய வகையில் புதிய தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காசி நஸ்ருல் பல்கலைக்கழகம் மற்றும் புவனேஷ்வரில் உள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாகவும், கொரோனா எந்தவிதமான மாற்றங்களை அடைந்தாலும் அதனை எதிர்த்து இந்த புதிய தடுப்பூசி செயலாற்றும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K