பயம் காட்டிய பஞ்சாப் பதுங்கிய பெங்களூரு! மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது

0
211

பயம் காட்டிய பஞ்சாப் பதுங்கிய பெங்களூரு! மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது

அகமதாபாத்தில் நடைபெற்ற 26 வது IPL போட்டி பஞ்சாப் கிங்க்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர் பெங்களூர் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே போட்டி நடைபெற்றது.இதில் முதலாவதாக பேட் செய்த பஞ்சாப் கிங்க்ஸ் அணி அணி 20 ஓவர்களில் 179/5 ரன்களை எடுத்தது.பின்னர் ஆடிய பெங்களூரு அணி 145/8 ரன்களுடன் தோல்வியை தழுவித்து

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்கமே அதிர்ச்சி கொடுத்தது. தொடக்க வீரர் பிரம்சிம்ரன் சிங் 7 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் – கிறிஸ் கெயில் ஜோடி அதிரடியை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர்.

ஜேமிசன் வீசிய ஒரே ஓவரில் கிறிஸ் கெயில் அடுத்தடுத்து 5 பவுண்டரிகள் அடித்து மிரட்டினார். இவர்களின் சிறப்பான பார்ட்னர்ஷிப்பால் பஞ்சாப் அணி 91 ரன்கள் எடுத்தது. ஆனால் இந்த பார்ட்னர்ஷிப்பை டேனியல் சாம்ஸ் பிரித்தார். சிறப்பாக ஆடி வந்த கிறிஸ் கெயில் 24 பந்துகளில் 46 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்த விக்கெட்டிற்கு பிறகு பஞ்சாப் அணியில் பெரும் இடி விழுந்தது. கெயிலுக்கு அடுத்து வந்த நிகோலஸ் பூரண் மீண்டும் ஒரு முறை டக் அவுட்டாகி வெளியேறினார். இந்த தொடரில் அவரின் 4வது டக் அவுட் இதுவாகும். தீபக் ஹூடா 5 ரன்கள், ஷாருக்கான் டக் அவுட்டாகி வெளியேறினர். இதனால் பஞ்சாப் அணியின் ஸ்கோரில் மந்தம் ஏற்பட்டது.

பின்னர் பொறுப்பை எடுத்துக்கொண்ட கே.எல்.ராகுல் கடைசியில் சில ஓவர்களில் அதிரடியாக விளையாடி 57 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 91 ரன்கள் அடித்தார். குறிப்பாக ஹர்ஷல் பட்டேல் வீசிய கடைசி ஓவரில் 20 ரன்கள் கிடைத்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்கம் முதலே திணறியது. தொடக்க வீரர் தேவ்தத் பட்டிக்கல் 7 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி ராஜட் பட்டிதர் ஜோடி நீண்ட நேரம் நிலைத்து ஆடினர். ஆனால் அவர்களால் அதிரடியாக ரன் சேர்க்க முடியவில்லை. இதனால் 6 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 36 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

ரன்கள் அடிக்க முடியாமல் இருந்த போது பஞ்சாப் பவுலர் ஹர்ப்ரீத் பிரார் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். அவரின் பந்துவீச்சில் ஆர்சிபியின் அதிரடி விரர்கள் விராட் கோலி (35), க்ளென் மேக்ஸ்வெல் (0), டிவில்லியர்ஸ் (3) அடுத்தடுத்து விக்கெட்டுகளை கொடுத்து வெளியேறினர்.

பெங்களூரு அணியின் விக்கெட்கள் சரிந்துக்கொண்டே இருந்த நிலையில். பின்னர் வந்த ஹர்ஷல் பட்டேல் 13 பந்துகளில் 31 ரன்கள் விளாசி மிரளவைத்தார். எனினும் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணியால் விக்கெட்களை இழந்து ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

author avatar
Parthipan K