வாங்கிட்டு போறதுக்கு இரண்டு கையும் பத்தலையே! இளநீர் தர்பூசணி நுங்கு குளிர்பானங்களை மூட்டை கட்டிச் சென்ற பொதுமக்கள்

0
193
#image_title

வாங்கிட்டு போறதுக்கு இரண்டு கையும் பத்தலையே! இளநீர் தர்பூசணி நுங்கு குளிர்பானங்களை மூட்டை கட்டிச் சென்ற பொதுமக்கள்

திருவண்ணாமலை அவலூர்பேட்டை புறவழிச் சாலையில் அதிமுக வடஆண்டாபட்டு ஊராட்சி மன்ற தலைவர் மோகன் கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்கும் விதமாக தண்ணீர் பந்தலை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அமைத்தார்.

இந்த தண்ணீர் பந்தலை திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் துவக்கி வைத்தார். இந்த தண்ணீர் பந்தலில் இளநீர், நீர்மோர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், குளிர்பானங்கள் பொதுமக்களுக்கு தருவதற்காக வைக்கப்பட்டிருந்தது.

இதனை பொதுமக்களுக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கொடுத்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் முண்டியடித்து ஆர்வத்துடன் இளநீர், நுங்கு, தர்பூசணி, குளிர்பானங்களை இரண்டு கைகளாலும் அள்ளிச் சென்றனர்.

மேலும் இரண்டு கையும் பத்தலையே என்று அள்ளியதை துண்டில் மூட்டை கட்டி எடுத்துச் சென்றதும், பழங்களை வாங்கியவர்கள் இரண்டு கைகளாலும் மாறி மாறி தின்றதும் அங்கிருந்தவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

author avatar
Savitha