கள்ளக்குறிச்சி பகுதிகளில் போராட்டம் வன்முறையாக வெடித்தது! 144 தடை உத்தரவு அமல்!

0
70

கள்ளக்குறிச்சி பகுதிகளில் போராட்டம் வன்முறையாக வெடித்தது! 144 தடை உத்தரவு அமல்!

கள்ளக்குறிச்சி பகுதியில் காலையிலிருந்து சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்பு அந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் மாணவர்கள் தன்னார்வலர்கள் போன்றவர்கள் இணைந்த 500க்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் காவலர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினார்கள். மேலும் சிலர் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து பள்ளியில் உள்ள வாகனங்கள் மற்றும் பள்ளியின் கண்ணாடிகள் ,கார்கள் போன்றவற்றை அடித்து நொறுக்கினார்கள். மேலும் இந்த தாக்குதலில் சுமார் 30க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த கலவரமானது கடந்த ஐந்து மணி நேரத்தில் தீவிரமடைந்தது. மேலும் இந்த சம்பவம்மானது பள்ளியின் விடுதியில் நடந்த காரணத்தால் விடுதிக்குள் புகுந்து விடுதியில் உள்ள அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வீடியோ பதிவாக இருப்பதால் வருங்காலத்தில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார். மேலும்

கள்ளக்குறிச்சி தாலுக்கா சின்னசேலம் நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் மாணவி இறப்பு தொடர்பாக உறவினர்கள் பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறிய காரணத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

author avatar
Parthipan K