அஜித்தின் 62-வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனம்!

0
66

அஜித்தின் 62-வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனம்!

இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித் நடிப்பில் அவரின் 60-வது படமாக சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் வலிமை. இந்த படத்தை எச்.வினோத் இயக்கி இருந்தார். மேலும், தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தயாரித்திருந்தார்.

வலிமை படத்திற்கு முன்பு, “அஜித், எச்.வினோத் மற்றும் போனி கபூர்” இவர்கள் மூவரின் கூட்டணியில் ஏற்கனவே வெளியான படம்தான் ‘நேர்கொண்ட பார்வை’. கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் ஈட்டியது.

அதனை தொடர்ந்து இவர்கள் மூவரும் மூன்றாவது முறையாக அடுத்த படத்தில் இணைந்துள்ளனர். இதையடுத்து இந்த படத்தில் அஜித்தின் தோற்றம் குறித்த புகைப்படத்தை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அஜித்தின் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விரைவில் துவங்க உள்ளது.

இந்த நிலையில், அஜித் நடிக்க இருக்கும் 62-வது படம் குறித்த தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதன்படி அஜித் நடிக்கவிருக்கும் 62-வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருகிறார் என்றும், அந்த படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைக்க இருப்பதாகவும், மேலும், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த தகவலை உறுதிபடுத்தி லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும் என்றும், படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K