நாட்டை தன் குடும்பமாக பார்க்கும் பிரதமர்! நூல் வெளியீட்டு விழாவில் கவர்னர் பேச்சு! 

0
221
#image_title

நாட்டை தன் குடும்பமாக பார்க்கும் பிரதமர்! நூல் வெளியீட்டு விழாவில் கவர்னர் பேச்சு! 

சென்னை கிண்டியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டார்.

சென்னை கிண்டியில் பிரதமர் மோடியும் அம்பேத்கரும் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது இதில் கலந்துகொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி நூல்களை வெளியிட்டார். அந்த விழாவில் கவர்னர் பேசியதாவது,

உலகத்தின் உயர்ந்த மொழி தமிழ். ‘மோடி@20’ மற்றும் அம்பேத்கர்&மோடி ஆகிய 2 புத்தகங்களும் தமிழ் மொழியில் வெளியிடப்படுவது பெருமைக்குரியது. அண்ணல் அம்பேத்கர் மிகச் சிறந்த தேசியவாதி. சமூகநீதி, சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்து  பெரிதும் சிந்தித்தவர். பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்தவர். 

பாகிஸ்தான் குறித்து அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை படித்துள்ளேன். இதுவரை அம்பேத்கரை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். அவர் அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை மட்டுமல்ல. சமூக அநீதிகளுக்கு எதிராக முன் நின்றவர். பள்ளிகளில் இருந்த பிரிவினை மற்றும் கோவில்களில் அனுமதி மறுப்பது உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்த்து போராடியவர்.

பட்டியலின பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள்  7% பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். சமூக நீதிப் பற்றி நாம் நிறைய பேசுகிறோம். ஆனால் நடப்பது அதற்கு மாறாக உள்ளது. குடிநீர் தொட்டியில் மலம் கழிப்பது. கோவில்களுக்கு செல்ல அனுமதி மறுப்பது போன்ற அநீதிகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இவைகள் மிகவும் வருத்தம் தருவதாக உள்ளன.

பிரதமர் மோடி நாட்டைத் தன் குடும்பமாக பார்க்கிறார். ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் உணவு அளிக்க செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடியின் உரையை இன்று உலகமே உற்றுநோக்கி கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.