பதவி பெரிதல்ல செய்யும் சேவைதான் பெரிது! முதல்வர் நெகிழ்ச்சியான பேச்சு!

0
81

பதவி என்பது வரும் போகும் ஆனால் நாம் மக்களுக்கு செய்த சேவை என்றென்றும் நிலைத்திருக்கும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உருக்கமாக தெரிவித்திருக்கின்றார். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழக முதல்வர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து மக்கள் நலத் திட்டங்களை ஆரம்பித்து வைத்து வருகின்றார். இந்த நிலையில் கன்னியாகுமரியில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் முதல்வர் அங்கே அரண்மனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழா ஒன்றில் பங்கேற்றார்.

நாட்டிலேயே முதல் முறையாக கிறிஸ்துவர்கள் ஜெருசலேத்தை பயணம் செல்வதற்கு அரசு உதவி செய்து இருக்கின்றது என்றால் அது தமிழ்நாட்டில் தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கின்றார். அதோடு தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் நாட்டிலேயே அதிக அளவிலான உயர் கல்வி பயிற்றுவிக்கும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகின்றது. அரசு கலை கல்லூரி போன்றவற்றை அதிமுக அரசு உருவாக்கி அதன் மூலமாக பல ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்கள் இன்று உயர்கல்வி பயிலும் நிலை உருவாகியிருக்கின்றது. தமிழக அரசின் நீர் மேலாண்மைத் திட்டம் தமிழ்நாட்டில் விளைச்சல் அதிகரித்து வருகின்றது. இந்தியாவிலேயே நீர் மேலாண்மைத் திட்டத்தில் தமிழகம் முதலிடம் பிடித்து இருக்கின்றது என்று தெரிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன் ஆனாலும் திமுக ஆட்சி காலத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 40 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பு படிப்பதற்காக தேர்வானவர்கள் இப்பொழுது 7.5 சதவீத இட ஒதிக்கீடு மூலமாக குமரி மாவட்டத்தைச் சார்ந்த 13 மாணவர்கள் உள்பட தமிழகம் முழுவதிலும் 313 மாணவர்கள் பயன் அடைந்திருக்கிறார்கள்.

தமிழக அரசு நீர் மேலாண்மை மற்றும் வேளாண்மை, கல்வி மின்சாரம் போன்ற துறைகளில் தேசிய விருது பெற்றிருக்கின்றது. ஒரே வருடத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கிய மாநிலம் தமிழகம் மட்டும் தான். இதன் மூலமாக ஆயிரத்து 650 மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. பதவி என்பது வரும் போகும் ஆனாலும் செய்த சேவை என்பது என்றென்றும் நிலைத்திருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here