“டுடே இஸ் மை லாஸ்ட் டே” வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்:தற்கொலை செய்து கொண்ட காவலர்?

0
70

பெரம்பூர் செம்பியம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்த ஜோசப் இவரது வயது 39. இவர் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவியும், 14 வயதில் ஒரு மகனும்,பத்து வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோசபிருக்கும் அவருடைய மனைவி ஜெகதீஸ்வரி-க்கும் குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது.இதனால் அவருடைய மனைவி கோபித்துக் கொண்டு தன் தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார் இதன் காரணமாக மனமுடைந்த ஜோசப் கடந்த சில நாட்களாக வேலைக்கும் செல்லாமல் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

நேற்று காலை இவருடைய தாய் ஜோசப்பை எழுப்புவதற்காக வந்துள்ளார். இவர் சுயநினைவு இன்றி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார் மேலும் இவர் பூச்சி மருந்தை குடித்து இருப்பதை மருத்துவர் உறுதி செய்தனர்.

இதன் அடிப்படையில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே காவலர்கள் ஜோசபின் போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர் அதில் இவர் தற்கொலை செய்வதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னர் “டுடே இஸ் மை லாஸ்ட் டே” என்று வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.காவலர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இவருடைய தற்கொலைக்கு காரணம் கணவன் மனைவி சண்டையில் ஏற்பட்ட மன அழுத்தமா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

author avatar
Pavithra

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here